'அப்புறம் எனக்கு கோவம் வரும் பாத்துக்கோங்க' உண்மையை மறைத்த குடும்பத்துடன் சண்டை செய்யும் கயல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'அப்புறம் எனக்கு கோவம் வரும் பாத்துக்கோங்க' உண்மையை மறைத்த குடும்பத்துடன் சண்டை செய்யும் கயல்!

'அப்புறம் எனக்கு கோவம் வரும் பாத்துக்கோங்க' உண்மையை மறைத்த குடும்பத்துடன் சண்டை செய்யும் கயல்!

Malavica Natarajan HT Tamil
Nov 12, 2024 07:20 AM IST

வீட்டில் நடந்த கலவரம் குறித்து கயலுக்கு தெரியக் கூடாது என உண்மையை மறைக்கும் குடும்பத்திடம் அவர் கோப்படுகிறார். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

'அப்புறம் எனக்கு கோவம் வரும் பாத்துக்கோங்க' உண்மையை மறைத்த குடும்பத்துடன் சண்டை செய்யும் கயல்!
'அப்புறம் எனக்கு கோவம் வரும் பாத்துக்கோங்க' உண்மையை மறைத்த குடும்பத்துடன் சண்டை செய்யும் கயல்!

வேகமாக சென்ற வட்டிக்காரர்

அவரிடம் இன்றே கயல் குடும்பம் கல்யாண செலவுக்காக வாங்கிய மொத்த பணத்தையும் திருப்பித் தரவேண்டும் என தகராறு செய்யுமாறும் வற்புறுத்துகிறார். இதையடுத்து, அவரும் சிவசங்கரியின் பேச்சைக் கேட்டு கயல் குடும்பத்திடம் சண்டை போட கிளம்பி சென்றுள்ளார்.

அங்கு ஆரம்பத்தில் சுமூகமாக சென்ற பேச்சுவார்த்தை வாக்குவாதமாகி, பின் கைகலப்பாக மாறியது. வட்டிக்காரர் 3 மணி நேரத்தில் மொத்த பணத்தையும் எடுத்து வைக்க வேண்டும் எனக் கூறிய ஆத்திரத்தில் அன்பு அவரை அடித்துவிட்டார்.

உண்மையை மறைக்கும் குடும்பத்தினர்

இதுகுறித்து எதுவும் அறியாத கயல், வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பதை மட்டும் யூகித்து அவசர அவசரமாக கிளம்பி வருகிறார். வந்து பார்த்தால் வீட்டில் உள்ளவர்களின் முகமே சரியில்லை. இதுகுறித்து கயல் எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இதனால், செய்வது அறியாது நின்ற கயல், ஒருநாள் நீங்கள் மறைக்கும் உண்மை எல்லாம் எனக்கு தெரியவரும் அப்போது, எனக்கு கோவம் வரும் எனக் கூறினார்.

இருப்பினும், வீட்டில் நடந்த சம்பவம் குறித்து யாரும் எதுவும் கயலிடம் வாயைத் திறக்கவில்லை. இதுதொடர்பான இன்றைய கயல் சீரியல் எபிசோடின் ப்ரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

கயல்- எழில் காதலால் கடுப்பாகும் சிவசங்கரி

கயலும் எழிலும் ஒருவருக்கு ஒருவர் அன்யோன்யமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்த சிவசங்கரிக்கு கோபம் தாங்கவில்லை. இதனால், என் மகனை என்னிடம் இருந்து பிரித்துலிட்டு, நீ சந்தோஷமாக இருக்கிறாயா? இனி நீ சந்தோஷமாக இருக்கவே முடியாது,நான் உன் குடும்பத்திற்கு கொடுக்கப்போகும் பிரச்சனையில் அந்தக் கயலை என் காலைப் பிடித்து கெஞ்ச வைப்பேன் என தன் மனதிற்குள்ளே திட்டம் தீட்டுகிறார்.

வட்டிக் காரரை வைத்து பிளான்

அப்போது, அவர் கயல் குடும்பம் கல்யாணத்திற்காக வட்டிக்குப் பணம் வாங்கியவரை வரவைத்து பேசுகிறார். அந்த சமயத்தில் கயல் திருமணத்திற்காக கொடுத்த பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என கயல் குடும்பத்தை தொந்தரவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இதனை ஏற்ற அந்த நபரும், கயல் வீட்டில் பணத்தைக் கேட்டு நச்சரித்துள்ளார். இது வாக்குவாாதமாக மாறி பின் கை கலப்பாக மாறியது. கோபத்தில் கயலின் தம்பி அன்பு பணம் கேட்டவரை சரமாரியாக தாக்குகிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.