Kayal Serial: ‘முறைதவறி நடக்கும் கெளதம்..எச்சரிக்கும் கயல்..’ நேற்று நடந்ததும்.. இன்று புரொமோவில் இடம்பெற்றதும் இங்கே!
Kayal Serial: கௌதமிடம் எழில் முன்னதாக அடித்ததை குறிப்பிட்டு, அவர் உன்னை அடித்ததை மறந்து விட்டாயா என்று சொல்லி எச்சரிக்கை விடுக்க, அவனோ அதற்கும் சேர்த்தும் தான் உன்னை நான் பழி வாங்கப் போகிறேன் என்று கூறுகிறான்.- கயல் சீரியல் புரொமோ சொல்வதென்ன?

கயல் சீரியல் தொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் கௌதம் கயலை மடக்கி உன்னுடைய இரக்க குணமே உனக்கு எதிரியாகிவிட்டது பார்த்தாயா? என்று கேட்க, கயல் அவனை முறைத்து பார்த்தாள். இன்னொரு பக்கம் வேதவள்ளி போலீஸ்காரருக்கு போன் செய்து, இதை மட்டும் செய்தால் உங்களது பெயர் ஊர் முழுக்க நன்றாக பரவும் என்று சொல்ல, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியே கட் செய்தால், மற்றொரு பக்கம் கயல் கௌதமிடம் எழில் முன்னதாக அடித்ததை குறிப்பிட்டு, அவர் உன்னை அடித்ததை மறந்து விட்டாயா என்று சொல்லி எச்சரிக்கை விடுக்க, அவனோ அதற்கும் சேர்த்தும் தான் உன்னை நான் பழி வாங்கப் போகிறேன் என்று கூறுகிறான். தொடர்ந்து அவளை கெளதம் நெருங்க, கயல் அவளை எச்சரிக்கிறாள். அத்தோடு புரொமோ முடிவடைகிறது.
நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?
கயல் சீரியலின் கடந்த எபிசோடில், ஷாலினி கயல் அம்மா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டே இருந்தாள். ஆனந்தி அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும், பலனில்லை. இன்னொரு பக்கம் தேவி தன்னுடைய கணவரோடு நெருக்கமாக இருந்த நினைவுகளை நினைத்து, கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.
இந்த நிலையில் கயல் வீட்டிற்கு வந்தாள். தேவி சோகமாக இருப்பதை பார்த்த அவள், இப்படி சோகமாக இருந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படி நன்றாக வளரும். விக்னேஷ் எங்களிடம் வந்து கேட்டால், நாங்கள் என்ன சொல்வோம் என்று அவளை சாதரண நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறாள்.
வேதவள்ளி வைத்த செக்
சாப்பிடச்சொன்னாலும் சாப்பிட மறுத்து விட்டாள். இந்த நிலையில் கயல் விக்னேசை சந்தித்ததைச் சொல்ல, பதட்டப்பட்ட தேவி அவர் எப்படி இருக்கிறார், என்னைப் பற்றி ஏதாவது கேட்டாரா என்று ஆர்வத்துடன் கேட்டாள். இதை பயன்படுத்திக் கொண்ட கயல், நீ ஒழுங்காக சாப்பிட்டால், நான் என்ன நடந்தது என்று சொல்கிறேன் என்று சொல்ல, அவள் சரி என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள்.
இந்த நிலையில், மெதுவாக உண்மையைச் சொன்ன கயல், விக்னேஷ் குடும்பம் முழுக்க முழுக்க சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று கூற முடியாது. ஆனால், எனக்கு வேதவள்ளி அத்தையும் விக்னேஷும் நிச்சயமாக வளைகாப்பிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினாள்.
இன்னொரு பக்கம் வேதவள்ளி விக்னேஷிடம், நிச்சயமாக நாம் வளைகாப்பிற்கு செல்லக்கூடாது என்று கட்டளை இடுகிறாள். ஒருவேளை நீ சென்றால் நான் மிகவும் வருத்தம் அடைவேன் என்றும் அவனையும் லாக் செய்தாள்.
பெங்களூர் கிளம்பிய எழில்
மற்றொரு பக்கம், எழில் தன்னுடைய நண்பர் மூலமாக கிடைத்த வேலையைச் சொல்லி, நாளைக்கு நான் பெங்களூருக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறான். இதைக் கேட்ட கயல் சந்தோஷமடைந்து இது உண்மையிலேயே நமக்கு சந்தோஷமான விஷயம் என்று சந்தோஷப்பட்டாள். மறுநாள் எழில் பெங்களூருக்கு கிளம்ப ஆயத்தமாக, மூர்த்தி நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுக்கிறான். அத்தோடு எபிசோடு முடிவடைந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்