Kayal Serial: ஷாலினிக்கு செக் வைத்த காமாட்சி.. அம்மா மேல் சந்தேகப்படும் அன்பு.. அதிர்ச்சியில் கயல்..
Kayal Serial: தன் மகள் தேவி அவருடைய கணவருடன் சேர்ந்து வாழ்ந்தால் தான் நான் உன்னை என் மருமகளாக ஏற்பேன் என ஷாலினியிடம் கமாட்சி கூறி இருக்கிறார்.

Kayal Serial: விக்னேஷ் அனுப்பியதாக கூறி கயல் வீட்டிற்கு வந்த பிரியாணி பார்சலை காமாட்சி வாங்கி வந்து தேவியிடம் தருகிறாள். தன் மருமகன் மனசு மாறி தேவி மீது அன்பாக மாறி வருவதாக எண்ணி இதனை தேவியிடம் கொடுத்தார். தேவி அதை சாப்பிட சென்ற போது, போன் வரவே அது விக்னேஷாக இருக்கும் என்ற ஆசையில் பிரியாணியை சாப்பிடாமல் வைத்துவிட்டு போன் எடுக்க செல்கிறார்.
மாமாவால் மயங்கிய ஷாலினி
அந்த சமயம் அங்கு வந்த ஷாலினி, விக்னேஷ் பெயரில் அவரது மாமா அனுப்பிய பிரியாணியை சாப்பிட்டு விட்டாள். இதனால், அவள் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தாள். இதைப் பார்த்த கயல் குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்து ஷாலினியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின், கயலின் தங்கை ஷாலினி மயங்கி விழுந்து விட்டதாகவும் மருத்துவமனையில் இருப்பதாகவும் அன்புவிடம் கூறினாள்.
அம்மாவை நம்பாத அன்பு
இதைக் கேட்டு பதற்றப்பட்டு வந்த அன்பு, தன் அம்மா மேல் சந்தேகப்படுகிறான். அவர்கள் தான் ஷாலினியின் சாப்பாட்டில் ஏதோ கலந்து உள்ளனர் என்று கூறி சண்டையிடுகிறான். கயல் அம்மாவிற்கு ஆதரவாக பேசிய போது, அவர்கள் அப்படி செய்யக் கூடியவர்கள் தான் என்றும் பேசி மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.
உண்மை அறிந்த அன்பு
பின், அன்பு ஷாலினியை பார்த்து பேசிய போது தான் அவள் பிரியாணி சாப்பிட்டதும், அதை சாப்பிட்டு முடித்த உடன் மயங்கி விழுந்ததும் அன்புவிற்கு தெரிந்தது. இதையடுத்து அன்பு என்ன செய்ய போகிறான் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செக் வைத்த காமாட்சி
இதற்கு முன்னதாக, மயக்கம் தெளிந்த ஷாலினியிடம், தன் மகள் தேவி உங்கள் வீட்டில் பழையபடி அவருடைய கணவருடன் எப்போது சேர்ந்து வாழ்கிறாளோ அப்போது தான் நான் உன்னை என் மருமகளாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறி இருக்கிறாள். இதனால், ஷாலினி சோகமாகிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
தேவி உயிருக்கு ஆபத்து
முன்னதாக, வேதவள்ளியின் குடும்பத்தின் இமேஜை கெடுத்த கயல் குடும்பத்தை பழிவாங்க எண்ணி வேதவள்ளியின் அண்ணன் மிக கொடூரமான வேலையில் இறங்கியுள்ளார். நாளை தேவிக்கு வளைகாப்பு நடப்பதாக உள்ள நிலையில், வேதவள்ளியின் அண்ணன் விக்னேஷ் கொடுத்ததாகக் கூறி உணவு டெலிவரி செய்யும் நபரிடம் ஒரு பார்சலை கொடுத்து அனுப்பி இருந்தார்.
மயங்கி விழுந்த ஷாலினி
தேவியின் வளைகாப்பிற்காக வீட்டில் உள்ளவர்கள் நகை வாங்க கடைக்கு சென்ற சமயத்தில் அந்த பார்சல் வீட்டிற்கு வந்தது. அதை வாங்கிய காமாட்சி தேவிக்கு சாப்பிட கொடுத்த நிலையில், அவர் போன் பேச போன சமயத்தில் ஷாலினி பிரியாணியை சாப்பிட்டு விட்டார். இதையடுத்து ஷாலினி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு என்ன ஆச்சு எனத் தெரியாமல் கயலின் அம்மா காமாட்சியும், தேவியும் பதறி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்