Kayal Serial: கயல் கல்யாணத்திற்கு கன்னி வெடி; சகுனியாய் திரியும் தர்மலிங்கம்;ராட்டினத்தில் ராஜி! -கயல் சீரியலில் இன்று!-kayal serial today promo episode on september 17 2024 indicates dharmalingam plans to stop kayal marriage - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: கயல் கல்யாணத்திற்கு கன்னி வெடி; சகுனியாய் திரியும் தர்மலிங்கம்;ராட்டினத்தில் ராஜி! -கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: கயல் கல்யாணத்திற்கு கன்னி வெடி; சகுனியாய் திரியும் தர்மலிங்கம்;ராட்டினத்தில் ராஜி! -கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 17, 2024 09:44 AM IST

Kayal Serial: கயல் தன்னுடைய குடும்பத்தினரிடம், நாம் நன்றாக வந்து விடக்கூடாது என்று நமது பின்னால் இருந்து நமக்கு இடையூறுகளை ஏற்படுத்த பலர் மண்டையை பிடித்துக் கொண்டே இருப்பார்கள் என்று கூறுகிறாள். - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: கயல் கல்யாணத்திற்கு கன்னி வெடி; சகுனியாய் திரியும் தர்மலிங்கம்;ராட்டினத்தில் ராஜி! -கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: கயல் கல்யாணத்திற்கு கன்னி வெடி; சகுனியாய் திரியும் தர்மலிங்கம்;ராட்டினத்தில் ராஜி! -கயல் சீரியலில் இன்று!

அதற்கு அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்று கேட்கிறார். மற்றொரு பக்கம் கயல் தன்னுடைய குடும்பத்தினரிடம், நாம் நன்றாக வந்து விடக்கூடாது என்று நமது பின்னால் இருந்து, நமக்கு இடையூறுகளை ஏற்படுத்த பலர் மண்டையை பிடித்துக் கொண்டே இருப்பார்கள் என்று கூறுகிறாள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

நேற்றைய தினம் ஒளிபரப்பான கயல் எபிசோடில், காமாட்சி மற்றும் குடும்பத்தினர், கயல் கல்யாணம் செய்து கொண்டு இந்த வீட்டை விட்டுச் சென்று விடுவாளே என்பதை நினைத்து வருந்தி கொண்டிருக்கின்றனர். அப்போது காமாட்சி, கயல் உங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு நீங்கள் கடன் பட்டு இருக்கிறீர்கள். ஆகையால் நான் இந்த உலகை விட்டு சென்று விட்டாலும், நீங்கள் அவளை எப்போதும் கைவிடக்கூடாது என்று சொன்னாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்; கயல் எங்கேயும் செல்லவில்லை. அருகில்தான் இருக்கப் போகிறாள் என்று சமாதானம் சொல்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் பேசியவற்றை கேட்டுக் கொண்டிருந்த சிறுமி ஒருவர், கயலிடம் இந்த விஷயங்களை ச்சொல்லி, நீங்கள் இந்த வீட்டை விட்டு சென்று விடுவீர்களோ, சென்று விட்டால், எங்களை மறந்து விடுவீர்களோ என்று கேட்டாள்.

கண்கலங்கிய கயல்

இதையடுத்து சபைக்கு வந்த கயல், நான் ஒன்றும் வேறு உலகத்திற்கு செல்லவில்லை. அருகில் இருக்கும் வளசரவாக்கத்திற்கு தான் செல்கிறேன். ஆகையால் நீங்கள் கூப்பிடும் தூரத்தில் தான் நான் இருக்கிறேன். என்னுடைய நாளை உங்களுக்காகவும் என்னுடைய கணவர் குடும்பத்திற்காகவும் சரியாகப் பிரித்து நான் செலவழிப்பேன். ஆகையால், எதையும் பற்றியும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

ஆரம்பத்தில் மூர்த்தி பொறுப்பில்லாமல் இருந்ததும், தற்போது பொறுப்போடு நடந்து கொள்வதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதே போல, ஆரம்பத்தில் தம்பி அவனுக்கு நான் காசுகொடுக்க வில்லை என்று கோபப்பட்டதும், இப்போது கோபத்தை அடக்கிக்கொண்டு செயல்படுவதும் ஆச்சரியமாக இருக்கிறது என்றாள். அதோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.