புதுசு புதுசா பிரச்னை வருதே.. தங்கை கழுத்தில் கத்தி.. எப்படி சமாளிக்க போகிறார் கயல்?
கயலை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சரவண வேலு அவளை தேடி சென்னைக்கே வந்துவிட்டார்.
கல்யாணம் முடிந்த கையோடு கயலின் சொந்த ஊருக்கு சென்று, அங்குள்ள கோயிலில் பொங்கல் வைக்க கயல் குடும்பத்துடன் எழிலும் செல்கிறார்.
அங்கு கயலின் அப்பா பெயரை சொல்லி நடக்கும் பல பிரச்சனைகளை சமாளித்து வந்த நிலையில்,சரவண வேலுவுடன் ஊர் சுற்றி பார்க்கச் சென்ற கயலுக்கும் எழிலுக்கும் ஆபத்து வருகிறது.
கயலிடமிருந்து எழிலைப் பிரிக்க அடியாட்களை வைத்து எழிலை கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த எழில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.
அந்த சமயத்தில் கயல் எழிலுக்காக கோயிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு வர நினைத்து கிளம்பினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தீபிகா எழிலை மருத்துவமனையில் இருந்து கடத்தினார்.
சரவண வேலுவை சந்தேகப்படும் கயல்
இதுபற்றி எதுவும் தெரியாமல் மருத்துவமனைக்கு வந்து பார்த்த கயலுக்கு அதிர்ச்சி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் சமயத்தில் சரவண வேலுவிடம் அவரது சித்தப்பா பேசியதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த கயல் அவரை போலீசிடம் பிடித்து கொடுத்தார்.
இதையடுத்து, எழிலை எங்கு கடத்தி வைத்திருக்கிறாய் எனக் கேட்டு போலீசாரும் சரவண வேலுவை அடி பிரித்து மேய்கிறார்கள். ஆனால், சரவண வேலு தான் எழிலை கடத்தவில்லை என திரும்ப திரும்ப கூறினார்.
அம்மாவின் திட்டத்தை அறியும் எழில்
அதே சமயத்தில் தீபிகா, தான் கடத்தி வந்த எழிலிடம் கயலை விட்டுவிட்டு தன்னுடன் வந்து வாழுமாறு கட்டாயப்படுத்தினார். அதற்கு எழில் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து தப்ப முயன்றார்.
அந்த சமயத்தில் தீபிகாவிற்கு எழில் அம்மா போன் செய்தார். அதை எடுத்தது எழில் எனத் தெரியாமல் இதுவரை கயலையும் எழிலையும் பிரிக்க போட்ட திட்டங்கள் அனைத்தை பற்றியும் பேசுகிறார். சென்னை வந்து அம்மாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறினார் கயல்.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் கயல் சீரியலின் இன்றைய ( டிசம்பர் 17) எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், கயலை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சரவண வேலு அவளை தேடி சென்னைக்கே வந்துவிட்டார். சாதரணமாக வராமல் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு கயல் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனந்தி மீது கத்தியை வைத்து கொலை செய்வது போல் மிரட்டுகிறார். இவன் யார் எதற்கு கொலை செய்ய துடிக்கிறான் என்று தெரியாமல் கயல் குடும்பம் திணறி நிற்கிறார்கள்.
மறுபக்கம் குழந்தையின் பள்ளிக்கு கட்டணம் கட்ட வேண்டும் என்று மூர்த்தி தனது பெரியப்பாவிடம் சென்று நிற்கிறார். சரவண வேலுவின் தாயும், மகனுடன் வந்து கயலை அழிக்க அவரது வீட்டில் தங்கி கொள்கிறார்.
பொறுப்புத் துறப்பு :
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்