Kayal Serial: கயல் திருமணம் நடக்குமா? - கவலையில் தவிக்கும் தாய் - இனி என்ன நடக்குமோ?
Kayal Serial: கயலின் தாய், “ உன் கழுத்தில் தாலி கயிறு ஏறும் வரை எனக்கு பதட்டமாக தான் இருக்கும் “ என்றார். அதற்கு வழக்கம் போல் கயல், “ என் திருமணம் எந்த பிரச்னையும் இல்லாமல் நல்ல படியாக நடக்கும். கவலை வேண்டாம் “ என்றார்.
Kayal Serial: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7. 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 16 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய ப்ரோமோ
மூர்த்தியின் மகள் கயலுக்கு திருமணம் நடக்க போகிறது என்பதால் கவலையில் இருக்கிறாள். கயலிடம் சென்று, “ நீங்க எங்களையும், இந்த வீட்டையும் கல்யாணம் நடக்க போகிறது என்பதால் விட்டுட்டு போயிடுவிங்களா அத்தை என்று சோகமான முகத்துடன் கேட்கிறாள்.
மறுபக்கம் கயலின் தாய், “ உன் கழுத்தில் தாலி கயிறு ஏறும் வரை எனக்கு பதட்டமாக தான் இருக்கும் “ என்றார். அதற்கு வழக்கம் போல் கயல், “ என் திருமணம் எந்த பிரச்னையும் இல்லாமல் நல்ல படியாக நடக்கும். கவலை வேண்டாம் “ என்று சொல்வதுடன் இன்றைய ( ஆகஸ்ட் 16 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.
நேற்றைய எபிசோட்
எழில் தனது தாய்யிடம், தீபிகாவை காண்பித்து, “ இவங்க மேல யாருக்குமே ஒரு நல்ல பார்வை இல்லை “ என சொல்கிறார். அதை கேட்டு சிவசங்கரி, “ கயல் தான் தீபிகா பற்றி ஏதோ சொல்லி குழப்பி இருக்க வேண்டும் “ என யோசிக்கிறார்.
மறுபக்கம் கயல் வீட்டிற்கு திருமணத்திற்காக வந்து இருக்கும் பாட்டி ஒருவர், “ இவ்வளவு நாள் கஷ்டப்பட்ட கயலுக்கு, கூடவே பிறந்து இருப்பவர்கள் என்ன செய்ய போகிறார்கள், என்பதை பார்க்கலாம் “ என புது குண்டை வீசினார்.
எழில், “ என்னுடைய கல்யாணத்துல எங்களுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. அது எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு திருமண பந்தக்கால் வரை வந்து இருக்கிறோம். ஆனால் என் அப்பாவும், ஆனந்தியும், தீபிகாவால் கல்யாணத்தில் பிரச்னை வரும் என நினைக்கிறார்கள். விரைவில் தீபிகா யார் என்பதை நான் கண்டு பிடிப்பேன் “ என்றார் எழில்.
தீபிகா மேல் சந்தேகமாம்
ஆனந்தியும், எழிலுக்கு போன் செய்து, “ தீபிகா மேல் சந்தேகமாக இருக்கிறது. அவள் கல்யாணத்தை நடத்த வந்த Event Manager போல் தெரியவில்லை. கல்யாணத்தை நிறுத்த வந்து இருப்பது போல் இருக்கிறது “ என்றார்.
மறுபக்கம் கயல் தனது தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றி இருக்கிறார். குடும்பம் முழுவதையும் தனது திருமணத்திற்காக அவர் ஒன்று சேர்த்து இருக்கிறார். இதனால் திருமண பந்தக்கால் வைக்கும் நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியாக மாறியது. எல்லாம் சரியாக இருந்தாலும் இந்த பெரியப்பா, பெரியம்மா மட்டும் மாறவே இல்லை. இன்னும் எப்படி திருமணத்தை நிறுத்துவது என்று தான் யோசித்து கொண்டு இருக்கிறார்.
ஆனந்தி, எழிலுக்கு போன் செய்து, “ அந்த தீபிகா கண்ட விஷயங்களை பேசி குட்டையை குழப்ப பார்க்கிறாள் “ என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்