Kayal Serial: தூக்கத்தில் இருந்து எழுந்த விக்னேஷ்.. விழி பிதுங்கிய வேதவள்ளி! - பரபரக்கும் கயல் சீரியல்!
Kayal Serial: ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவள், ஷாலினியை பிடித்து வெளியே தள்ள, தூக்க மாத்திரை கொடுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்த விக்னேஷ், திடீரென்று எழுந்து வந்து விட்டான். - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அன்பும் ஷாலினியும் வேதவள்ளியிடம் சென்று, விக்னேஷை எப்படியாவது தேவியின் வளைகாப்பிற்கு வர வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அவளோ என்ன சொல்லியும் சம்மதிக்க மறுக்கிறாள்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவள், ஷாலினியை பிடித்து வெளியே தள்ள, தூக்க மாத்திரை கொடுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்த விக்னேஷ், திடீரென்று எழுந்து வந்து விட்டான். இதைப் பார்த்த வேதவள்ளி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அதன் பின்னர் என்ன ஆனது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
கடந்த எபிசோடில்நடந்தது என்ன?
கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், விக்னேஷ் கண்டிப்பாக வளைகாப்பிற்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு கயல் குடும்பமே அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, உண்மையிலேயே விக்னேஷ் வருவானா மாட்டானா என்பதை தெரிந்து கொள்வதற்காக, கோமதியை வைத்து தேவியிடம் விஷயத்தை தெரிந்துகொள்ள வடிவு ஆசைப்பட்டாள். ஆனால், அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. காரணம், தேவியும் கயல் சொன்னது போலவே விக்னேஷ் வருவார் என்று கூறி விட்டாள்.
தூக்க மாத்திரை செய்த வேலை
இன்னொரு பக்கம் விக்னேஷ், அலுவலகத்துக்குச் செல்கிறேன் என்று கிளம்பி கொண்டிருக்க, இவன் அங்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வளைகாப்பிற்கு சென்று விடுவானோ என்று வேதவள்ளி அச்சப்பட்டாள்.
இதனையடுத்து சொந்த மகன் என்றும் பாராமல், அவனை அங்கேயே தூங்க வைப்பதற்காக ஜூஸில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, அதை வேலைக்காரியிடம் கொடுத்து அனுப்பினாள்.
தொடர்ந்து அவன் தூங்கி விட்டானா என்று கேட்க, வேலைக்காரியோ சார் தூங்கி விட்டார் என்று சொல்ல, வேதவள்ளி சந்தோஷம் அடைந்தாள். இதற்கிடையே தர்மலிங்கம் கயலிடம் வந்து மாப்பிள்ளை வந்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது வரை அவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார்.
மாற்றுத்திட்டம் இருக்கிறது.
இதைக்கேட்ட கயல் எனக்கும் அந்த சந்தேகம் இருந்தாலும், அவர் ஒரு வேலை வரவில்லை என்றால், மாற்று ஏற்பாடு ஒன்றையும் தான் செய்து வைத்திருப்பதாக கூறினாள். இதை பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி, தானும் அன்பும் செய்த தவறின் காரணமாகவே கயலும்,தேவியும் இந்த பாடு படுகிறார்கள் என்று புலம்ப, அன்பு இதில் நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்டான். உடனே, அவள் இப்பொழுதே நாம் அம்மாவிடம் சென்று பேசி விக்னேஷை வரவைக்கலாம் என்றாள். இதனையடுத்து இருவரும் கிளம்ப, அதை கயலும் எழிலும் பார்த்து நிற்கிறார்கள் அத்தோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்