Kayal Serial: மூடிவைக்கப்பட்ட ரகசியம்.. எழிலிடம் உண்மையை சொல்லிய கயல்.. திருமணம் நடக்குமா? நடக்காதா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: மூடிவைக்கப்பட்ட ரகசியம்.. எழிலிடம் உண்மையை சொல்லிய கயல்.. திருமணம் நடக்குமா? நடக்காதா?

Kayal Serial: மூடிவைக்கப்பட்ட ரகசியம்.. எழிலிடம் உண்மையை சொல்லிய கயல்.. திருமணம் நடக்குமா? நடக்காதா?

Aarthi Balaji HT Tamil
Published Jul 12, 2024 01:01 PM IST

Kayal Serial: ஜாதகம் பொருத்தம் கயல், எழிலுக்கு சரியாக இல்லாத காரணத்தினால் புது குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கயலை கொலை செய்ய எழிலின் தாய் முயன்றதால் அவர் மேலும் மனம் உடைந்தார்.

எழிலிடம் உண்மையை சொல்லிய கயல்.. திருமணம் நடக்குமா? நடக்காதா?
எழிலிடம் உண்மையை சொல்லிய கயல்.. திருமணம் நடக்குமா? நடக்காதா?

தமிழ் தொலைக்காட்சித் துறையானது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிராந்திய சேனல்களிலும் டிவி சோப்புகளுடன் வளர்ந்து வருகிறது. மதியம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை விட இரவில் ஒளிபரப்பபடும் சீரியல்களே இல்லத்தரசிகளை ஈர்க்கின்றன.

டி. ஆர். பியில் மாஸ்

அதே சமயம் ஃபிரைம் டைம் சீரியல்கள் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் திரையில் கவர்ந்து. அதிக டி. ஆர். பியில் களுக்கு வழிவகுக்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் திரையிடப்பட்டடு வரும் சீரியல் கயல். சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல சீரியல்களில் இதுவும் முக்கியமான ஒன்று.

முதலில் டி. ஆர். பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த கயல் தற்போது இரண்டாவது இடத்திற்கு நகர்ந்து சென்று இருக்கிறது.

கயல்

பிரபல தொலைக்காட்சி நடிகையான சைத்ரா ரெட்டி, கயல் என்ற பாத்திரத்தில் தலைப்பு கேரக்டரில் நடித்து உள்ளார். இது அந்தக் கதாபாத்திரம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி போராடுகிறார் என்பதைச் சுற்றி வருகிறது. அவர் குடும்பத்தின் ஒரே நபராக சம்பாதிப்பவர். ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் கயலின் அமைதியான காதலனாக எழில் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.

காதலுக்கு பச்சை கொடி காட்டாமல் இருந்த கயல், இறுதியாக எப்படியோ எழிலுக்கு சரி என சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணம் வேலை சென்று கொண்டு இருக்க எதிர்பாராத பல விஷயங்கள் நடந்தது.

புது குழப்பம்

ஜாதகம் பொருத்தம் கயல், எழிலுக்கு சரியாக இல்லாத காரணத்தினால் புது குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கயலை கொலை செய்ய எழிலின் தாய் முயன்றதால் அவர் மேலும் மனம் உடைந்தார்.

இன்றைய எபிசோட்

கயல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து கொண்டு, எதனால் கயல் அமைதியாக இருக்கிறார் என கேள்வி கேட்டு வருகிறார்கள். உடனே மனதில், எழில் அம்மாவிற்கு என்னை பிடிக்கவில்லை என்பதை எப்படி சொல்லுவேன் என யோசித்து கொண்டு இருக்கிறார். 

எழிலிடம் உண்மையை சொல்லிய கயல்

பின்னர் உள்ளே சென்று வீட்டில் சொல்வதற்கு முன்பாக ஜாதகம் சரியில்லை என்பதை எழிலிடம் சொல்ல நினைக்கிறார். உடனே போனை எடுத்து நடந்த அனைத்தையும் எழிலிடம் சொல்லுகிறார். கயல் தான் உலகம் என நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும் எழிலுக்கு குண்டு வீசியது போல் உள்ளது. அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.