Kayal Serial: உறுதியாக நிற்கும் வேதவள்ளி.. கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த எழில்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: உறுதியாக நிற்கும் வேதவள்ளி.. கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த எழில்..

Kayal Serial: உறுதியாக நிற்கும் வேதவள்ளி.. கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த எழில்..

Malavica Natarajan HT Tamil
Jan 30, 2025 10:12 AM IST

Kayal Serial: தேவியின் வளைகாப்பிற்கு செல்லக் கூடாது என்பதில் வேதவள்ளி உறுதியாக நின்றதுடன், விக்னேஷையும் வற்புறுத்தி வருகிறார்.

Kayal Serial: உறுதியாக நிற்கும் வேதவள்ளி.. கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த எழில்..
Kayal Serial: உறுதியாக நிற்கும் வேதவள்ளி.. கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த எழில்..

நின்று போன வளைகாப்பு

அன்பு- ஷாலினி திருமணத்தால் நின்று போன வளைகாப்பு நிகழ்ச்சியை மீண்டும் குடும்பத்தின் ஆதரவோடும், வேதவள்ளியின் ஆசிர்வாதத்தோடும் நடத்த வேண்டும் என்பதற்காகவும், தேவியை விக்னேஷ் மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கயல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். விக்னேஷ் சற்று மனம் இறங்கி வந்தாலும் வேதவள்ளியின் தீர்க்கமான முடிவு அவரை அமைதி காக்க வைக்கிறது.

சமாதான முயற்சியில் கயல்

இதனால், வேதவள்ளியை சமாதானம் செய்ய கயல் பொது இடத்தில் வைத்து கயலின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனால், அப்போதும் மனம் இறங்காத வேதவள்ளி விக்னேஷை என்ன நடந்தாலும் வளைகாப்பிற்கு செல்ல கூடாது என மிரட்டி வருகிறார். ஆனால், இங்கு கயல் தேவியையும் குடும்பத்தினரையும் சமாதானம் செய்து வருகிறார்.

எழிலின் முடிவு

இந்நிலையில், கயலுக்கு தன் அம்மா செய்த துரோகத்தை நினைத்து ஆத்திரம் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறினார் எழில். அத்துடன், தன் அம்மாவின் பெயரையோ உதவியையோ பயன்படுத்தாமல் சொந்த காலில் நிற்க வேண்டும் என நினைத்து வேலை தேடி அலைந்தார்.

ரொமான்ஸ் மோடில் எழில்

இந்த சமயத்தில் தான் அவருக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. இந்த வேலைக்கு செல்ல எழில் தயாராகிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் கயலை பிரியும் சோகத்தில் கயலிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார்.

இவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து பொறாமைப்படும் கயலின் பெரியம்மா, கயல், எழிலின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை எல்லாம் எழிலின் அம்மா வேதவள்ளிக்கு அனுப்பி டென்சன் ஏற்றுகிறார். இதுகுறித்த ப்ரோமோவை சன்டிவி வெளியிட்டுள்ளது.

எதிராக நின்ற வேதவள்ளி

முன்னதாக, ஆரம்பத்தில் இருந்தே அன்பு- ஷாலினி காதலுக்கு வேதவள்ளி தடையாகத்தான் இருந்தார். இது தெரிந்தும், இவர்களின் காதலுக்கு கயல், ஷாலினியின் அண்ணன் விக்னேஷ் என எல்லோரும் ஆதரவாகத் தான் இருந்தனர்.

சவால் விட்ட கயல்

அவர்கள் அனைவருமே, அன்பு போலிஸ் ட்ரெயினிங் முடித்து வேலை வாங்கும் வரை காத்திருக்குமாறு மட்டும் தான் கூறினர். அதுமட்டுமில்லாமல், கயல், ஷாலினிக்கு வேறு கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்ததை அறிந்து, வேதவள்ளியிடமே போய், ஷாலினிக்கும் அன்புவிற்கும் தான் கல்யாணம் நடக்கும். அதை நான் நடத்தியும் காட்டுவேன் என்றெல்லாம் சவால் விட்டார்.

திருட்டுக் கல்யாணம்

இதனால், ஆத்திரமடைந்த வேதவள்ளி, கயலின் அம்மாவிடம் எச்சரித்து அனுப்பினார். இதனால் கயல் அம்மா மனமுடைந்தார். மேலும், ஷாலினியை அன்புவிடம் இருந்து தள்ளி இருக்குமாறும் கூறினார். அதுவரை அமைதியாக இருந்த ஷாலினி அன்பு அம்மா மூலம் வேதவள்ளியின் திட்டத்தை எல்லாம் தெரிந்து கொண்டார்.

இதனால், அவசரத்திலும் பயத்திலும் என்ன செய்வது எனத் தெரியாமல் அன்புவிற்கு போன் செய்து அவரை வரவழைத்து கோயிலில் திருட்டுத் தனமாக கல்யாணம் செய்து கொண்டார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.