Kayal Serial: இருக்க பிரச்சன போதாதுன்னு இவன் வேற.. கயலை கடுப்பாக்கும் சரவண வேலு..
Kayal Serial: கயல் எனக்கு தோழி மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என சரவண வேலு சத்தியம் செய்கிறான்.

Kayal Serial: இருக்க பிரச்சன போதாதுன்னு இவன் வேற.. கயலை கடுப்பாக்கும் சரவண வேலு..
Kayal Serial: கயல் வீட்டினர் ஏற்பாடு செய்த வளைகாப்பிற்கு தான் வர வேண்டுமானால் என் அம்மா முதலில் தேவியை மன்னிக்க வேண்டும் என விக்னேஷ் கூறினார்.
சூடான வேதவள்ளி
இதனால், கயல் உமன்ஸ் கிளப்பில் இருக்கும் வேதவள்ளியைக் காண செல்கிறாள். அப்போது, கயலைப் பார்த்ததும் கோவமடைந்த வேதவள்ளி, கயலை தனியாக அழைத்து பேசுகிறாள். ஏற்கனவே, இங்குள்ள அத்தனை பேர் முன்னிலையிலும் என் தலைவர் பதவியை பறித்தாய். இப்போது என்ன திட்டத்தோடு வந்திருக்க என்று கேட்டு திட்டினார்.
காலில் விழ வேண்டும்
கயல் தேவியின் வளைகாப்பு பற்றி பேசியதும் சூடான வேதவள்ளி, உன் அம்மா என் காலிலும் என் பையன் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அதுமட்டுமல்ல, எந்த ஆளுங்க முன்னாடி என் தலைவர் பதவி போச்சோ, அவர்கள் முன்னாடி நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும் எண்பும் சொன்னார்.