Kayal Serial: அன்பு மீது எஃப்ஐஆர்? கலங்கி நின்ற கயலை காப்பாற்ற வந்த விக்னேஷ்! இனி எல்லாம் சுபமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: அன்பு மீது எஃப்ஐஆர்? கலங்கி நின்ற கயலை காப்பாற்ற வந்த விக்னேஷ்! இனி எல்லாம் சுபமா?

Kayal Serial: அன்பு மீது எஃப்ஐஆர்? கலங்கி நின்ற கயலை காப்பாற்ற வந்த விக்னேஷ்! இனி எல்லாம் சுபமா?

Malavica Natarajan HT Tamil
Jan 24, 2025 06:49 AM IST

Kayal Serial: ஷாலினியை கடத்தி வந்து கல்யாணம் செய்ததற்காக அன்பு மீது போலீசார் எஃப்ஐஆர் போட வந்ததை விக்னேஷ் தடுத்து நிறுத்துகிறான்.

Kayal Serial: அன்பு மீது எஃப்ஐஆர்? கலங்கி நின்ற கயலை காப்பாற்ற வந்த விக்னேஷ்! இனி எல்லாம் சுபமா?
Kayal Serial: அன்பு மீது எஃப்ஐஆர்? கலங்கி நின்ற கயலை காப்பாற்ற வந்த விக்னேஷ்! இனி எல்லாம் சுபமா?

வாழ்க்கையில் விளையாடிய அன்பு

தேவிக்கு வளைகாப்பு செய்ய ஆசை ஆசையாய் கயல் குடும்பத்தினர் இருந்த நிலையில், குட்டையை குழப்பி தேவியின் வாழ்க்கையை சீரழித்த அன்பு மேல் எல்லாரும் கோவமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவனையும் ஷாலினியையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

கைதான அன்பு

அப்படி இருந்தும் கோவம் அடங்காத வேதவள்ளி, அவரது அண்ணனிடம் நடந்ததை சொல்லி புலம்பியுள்ளார். அவர், உடன், போலீஸ் ஸ்டேஷன் சென்று அன்பு மேல் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த போலீசார் வீடு தேடி வந்து அன்புவை கைது செய்தனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர், அன்புவிற்காக ஆதங்கப்பட்டு கதறினர். ஷாலினி செய்வது அறியாமல் அன்புவை போலீஸ் அழைத்துச் செல்லும் போது வாசலில் வந்து நின்று அழுது கொண்டிருந்தார்.

அன்பு மீது எஃப்ஐஆர்?

இந்நிலையில், போலீசார் அன்புவை விசாரித்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர் மீது எஃப்ஐஆர் போடுமாறு வேதவள்ளியின் அண்ணன் போலீசாரை வற்புறுத்தினான்.

அதன் பேரில் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய முயன்ற போது, கயலும் அன்புவும் அவரது குடும்பத்தாரும் போலீசிடம் கெஞ்சினர். அன்புவிற்கு சின்ன வயதில் இருந்தே போலீஸ் ஆவது ாதான் கனவு. இந்த எஃப்ஐஆர் போட்டால் அன்புவின் வாழ்க்கையே வீணாகிவிடும் என கயலும் அன்புவும் கதறுகின்றனர்.

தடுத்த விக்னேஷ்

இதை ஏதும் காதில் வாங்கிக் கொள்ளாத போலீஸ், அன்பு குறித்த தகவலை கேட்டு வந்தார். அப்போது, போலீஸ் ஸ்டேஷன் வந்த விக்னேஷ் அதை தடுக்க நிறுத்துங்க எனக் கத்தினார். இதன் மூலம் அன்பு மேலே எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.

கயலுக்கு வைத்த செக்

இதையடுத்து, விக்னேஷின் மனம் இறங்கி இருப்பதை அறிந்த கயல், அவரிடம் தேவியின் வளைகாப்பு பற்றி பேச வந்தார். ஆனால், விக்னேஷோ கயலுக்கு செக் வைத்துள்ளார். அதாவது, தேவியின் வளைகாப்புக்கு நான் வர வேண்டும் என்றால் முதலில் நீங்க என் அம்மாவை சமாதானப்படுத்தனும். அவங்க வளைகாப்புக்கு வந்தா நானும் வரேன் என சொல்லி அதிர்ச்சி தந்தார். இதனால் வேதவள்ளியை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் கயல் தவித்து வருகிறார்.

கயலின் வாக்கு

இதை தாங்கிக் கொள்ள முடியாத தேவி வீட்டில் கதறி அழுதார். அவரது நிலையைப் பார்த்த குடும்பத்தினரும் மிகவும் வருத்தமாகினர். முன்னதாக, நின்று போன தேவியின் வளைகாப்பை மீண்டும் நடத்துவதாகவும் அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் நிச்சயம் வருவார் என்றும் கயல் வாக்கு கொடுத்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.