Kayal Serial: அன்புவின் போலீஸ் கனவு பறிபோகுமா? வேதவள்ளி செய்யப் போவது என்ன? கயல் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: அன்புவின் போலீஸ் கனவு பறிபோகுமா? வேதவள்ளி செய்யப் போவது என்ன? கயல் சீரியல் அப்டேட்

Kayal Serial: அன்புவின் போலீஸ் கனவு பறிபோகுமா? வேதவள்ளி செய்யப் போவது என்ன? கயல் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Jan 23, 2025 08:04 AM IST

Kayal Serial: தன் மகளை அன்பு திருமணம் செய்து கொண்ட கோவத்தில் இருக்கும் வேதவள்ளி, அன்புவை கைது செய்து அவரின் போலீஸ் கனவுக்கே உலை வைக்க காத்திருக்கிறார்.

Kayal Serial: அன்புவின் போலீஸ் கனவு பறிபோகுமா? வேதவள்ளி செய்யப் போவது என்ன? கயல் சீரியல் அப்டேட்
Kayal Serial: அன்புவின் போலீஸ் கனவு பறிபோகுமா? வேதவள்ளி செய்யப் போவது என்ன? கயல் சீரியல் அப்டேட்

வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அன்பு

தேவிக்கு வளைகாப்பு செய்ய ஆசை ஆசையாய் கயல் குடும்பத்தினர் இருந்த நிலையில், குட்டையை குழப்பி தேவியின் வாழ்க்கையை சீரழித்த அன்பு மேல் எல்லாரும் கோவமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவனையும் ஷாலினியையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

கைதான அன்பு

அப்படி இருந்தும் கோவம் அடங்காத வேதவள்ளி, அவரது அண்ணனிடம் நடந்ததை சொல்லி புலம்பியுள்ளார். அவர், உடன், போலீஸ் ஸ்டேஷன் சென்று அன்பு மேல் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த போலீசார் வீடு தேடி வந்து அன்புவை கைது செய்தனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர், அன்புவிற்காக ஆதங்கப்பட்டு கதறினர். ஷாலினி செய்வது அறியாமல் அன்புவை போலீஸ் அழைத்துச் செல்லும் போது வாசலில் வந்து நின்று அழுது கொண்டிருந்தார்.

மூர்த்தியை திட்டும் கயல்

அன்புவை போலீஸ் கைது செய்ததை அறிந்த கயல், வீட்டிற்கு வந்து மூர்த்தியை திட்டித் தீர்த்தார். தேவிக்கு நல்லது செய்ய நினைத்து, மூர்த்தி மருத்துவமனையில் விக்னேஷையும் அவரது அம்மா வேதவள்ளியையும் முன்னதாக பார்க்க சென்ற போது அவரை அசிங்கப்படுத்தியது மட்டுமல்லாது கழுத்தை பிடித்தும் வெளியே தள்ளினர்.

ஆனால், நடந்ததை வீட்டில் மூர்த்தி மறைத்தால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்தது. தேவி விஷயத்தை நான் பாத்துக்குறேன்னு சொல்லியும் நீ ஏன் அங்க போன. இப்போ வீட்ல இருக்க பிரச்சன போதாதுன்னு புதுசா இது வேற வந்திருக்கு என கயல் மூர்த்தியிடம் கண்டபடி கத்தினார்.

அன்பு நிலை என்ன

இந்நிலையில், அன்புவை போலீஸ் கைது செய்து ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர். அப்போது, வேதவள்ளியின் அண்ணன் அன்பு மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் இதனால் அவனது போலீஸ் கனவு பறிபோய்விடும் என்றும் கூறி கோவத்தில் இருக்கும் வேதவள்ளியை சீண்டி விடுகிறார்.

கெஞ்சும் கயல்

இதை தெரிந்துகொண்ட கயல் அன்புவின் எதிர்கால வாழ்க்கைக்காவும் , போலீஸ் கனவிற்காகவும் போலீசாரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, விஷயம் தெரிந்து வந்த கயலின் பெரியப்பா, தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அன்புவை ரிலீஸ் செய்ய என்ன செய்ய முடியும் என யோசித்து வருகிறார்.

தேவியின் உறவு முறிந்தது

முன்னதாக, மருத்துவமனையில் இருக்கும் தேவியின் கணவர் விக்னேஷை பார்க்க சென்ற கயல் குடும்பத்தையும் வேதவள்ளி அசிங்கப்படுத்தி அனுப்பி இருப்பார்.

இந்த நிலையில், விக்னேஷிற்காக மீண்டும் வேதவள்ளியிடம் பேசிய தேவியை வேதவள்ளி மிக மோசமாக திட்டியுள்ளார். அத்துடன், தேவிக்கும் விக்னேஷிற்கும் இருந்த உறவு முற்றிலும் உடைந்து போய்விட்டதாகவும் இனி இவர்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

கயலின் வாக்கு

இதை தாங்கிக் கொள்ள முடியாத தேவி வீட்டில் கதறி அழுதார். அவரது நிலையைப் பார்த்த குடும்பத்தினரும் மிகவும் வருத்தமாகினர். முன்னதாக, நின்று போன தேவியின் வளைகாப்பை மீண்டும் நடத்துவதாகவும் அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் நிச்சயம் வருவார் என்றும் கயல் வாக்கு கொடுத்தார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.