Kayal Serial: அரெஸ்ட் செய்யப்படும் அன்பு.. தவிக்கும் குடும்பம்.. கோவத்தில் கயல்..
Kayal Serial: ஷாலினியை வீட்டிலிருந்து கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதாக வேதவள்ளியும் அவரது அண்ணனும் கொடுத்த புகாரின் பேரில் அன்பு கைது செய்யப்பட்டுள்ளான்.

Kayal Serial: அன்பு வீட்டிற்கு தெரியாமல் ஷாலினியை அவசர அவசரமாக கல்யாணம் செய்ததால் கோவமடைந்த வேதவள்ளி, தன் மகளின் வாழ்க்கை சீரழிந்ததாகக் கூறி தேவியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அன்பு
தேவிக்கு வளைகாப்பு செய்ய ஆசை ஆசையாய் கயல் குடும்பத்தினர் இருந்த நிலையில், குட்டையை குழப்பி தேவியின் வாழ்க்கையை சீரழித்த அன்பு மேல் எல்லாரும் கோவமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவனையும் ஷாலினியையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
கைதான அன்பு
அப்படி இருந்தும் கோவம் அடங்காத வேதவள்ளி, அவரது அண்ணனிடம் நடந்ததை சொல்லி புலம்பியுள்ளார். அவர், உடன், போலீஸ் ஸ்டேஷன் சென்று அன்பு மேல் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த போலீசார் வீடு தேடி வந்து அன்புவை கைது செய்தனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர், அன்புவிற்காக ஆதங்கப்பட்டு கதறினர். ஷாலினி செய்வது அறியாமல் அன்புவை போலீஸ் அழைத்துச் செல்லும் போது வாசலில் வந்து நின்று அழுது கொண்டிருந்தார்.
மூர்த்தியை திட்டும் கயல்
அன்புவை போலீஸ் கைது செய்ததை அறிந்த கயல், வீட்டிற்கு வந்து மூர்த்தியை திட்டித் தீர்த்தார். தேவிக்கு நல்லது செய்ய நினைத்து, மூர்த்தி மருத்துவமனையில் விக்னேஷையும் அவரது அம்மா வேதவள்ளியையும் முன்னதாக பார்க்க சென்ற போது அவரை அசிங்கப்படுத்தியது மட்டுமல்லாது கழுத்தை பிடித்தும் வெளியே தள்ளினர்.
ஆனால், நடந்ததை வீட்டில் மூர்த்தி மறைத்தால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்தது. தேவி விஷயத்தை நான் பாத்துக்குறேன்னு சொல்லியும் நீ ஏன் அங்க போன. இப்போ வீட்ல இருக்க பிரச்சன போதாதுன்னு புதுசா இது வேற வந்திருக்கு என கயல் மூர்த்தியிடம் கண்டபடி கத்தினார்.
தேவியின் உறவு முறிந்தது
முன்னதாக, மருத்துவமனையில் இருக்கும் தேவியின் கணவர் விக்னேஷை பார்க்க சென்ற கயல் குடும்பத்தையும் வேதவள்ளி அசிங்கப்படுத்தி அனுப்பி இருப்பார்.
இந்த நிலையில், விக்னேஷிற்காக மீண்டும் வேதவள்ளியிடம் பேசிய தேவியை வேதவள்ளி மிக மோசமாக திட்டியுள்ளார். அத்துடன், தேவிக்கும் விக்னேஷிற்கும் இருந்த உறவு முற்றிலும் உடைந்து போய்விட்டதாகவும் இனி இவர்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்றும் கூறினார்.
கயலின் வாக்கு
இதை தாங்கிக் கொள்ள முடியாத தேவி வீட்டில் கதறி அழுதார். அவரது நிலையைப் பார்த்த குடும்பத்தினரும் மிகவும் வருத்தமாகினர். முன்னதாக, நின்று போன தேவியின் வளைகாப்பை மீண்டும் நடத்துவதாகவும் அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் நிச்சயம் வருவார் என்றும் கயல் வாக்கு கொடுத்தார்.
குடும்பத்தை தவிக்க வைத்த அன்பு
முன்னதாக, கயல் சீரியலில் வீட்டில் இருக்கும் நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காமல் அன்பு ஷாலினியை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்ய முடிவெடுத்தான். இதை அறிந்த அன்பு குடும்பமும் ஷாலினி குடும்பமும் இவர்கள் இருவரையும் தேட முயற்சித்த நிலையில், கயல் அவர்களை கண்டுபிடித்தார்.
உங்களுக்கு நான் தான் பிரச்சனை
ஆனால், கயலின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத அன்பு, வீட்டில் தேவி, நீ எல்லாம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான். ஆனால் நான் காதலித்தால் மட்டும் உங்களுக்கு எல்லாம் பிரச்சனை தான். இந்த வீட்டில் தேவி மட்டும் தான் பிறந்தாளா. நான் எல்லாம் என் ஆசையை நிறைவேற்றவே கூடாதா என அன்பு அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினான்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்