தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kayal Anandhi Latest Interview About His Love Story

Kayal Anandhi: ‘பார்த்த உடனே அடித்த ஸ்பார்க்’ - கயல் ஆனந்தி காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 23, 2024 06:00 AM IST

முதன்முறையாக அவரை பார்க்கும் போதே, இவர்தான் நம்முடைய வாழ்க்கைத் துணை என்று ஸ்பார்க் அடித்து விட்டது. அவரை பார்க்கும் போது எனக்கு கிடைத்த ஃபீல் வேறு யாரிடமும் வரவில்லை

கயல் ஆனந்தி காதல்!
கயல் ஆனந்தி காதல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காதல் கதையை கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, “முதன்முறையாக அவரை பார்க்கும் போதே, இவர்தான் நம்முடைய வாழ்க்கைத் துணை என்று ஸ்பார்க் அடித்து விட்டது. அவரை பார்க்கும் போது எனக்கு கிடைத்த ஃபீல் வேறு யாரிடமும் வரவில்லை

கிட்டத்தட்ட ஒரு வருடம் நண்பர்களாக பழகினோம். நாங்கள் பணியாற்றிய படத்தின் இயக்குநர் அவரின் உறவினர்தான். அவர் எங்களை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவரது குடும்பத்தில் அவர் பேசி இருக்கிறார்.

இதற்கிடையே இவரும் என்னிடம் எப்போது கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறீர்கள். உங்களுடைய ஐடியா என்ன என்றெல்லாம் கேட்டார்.

என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் என்னுடைய அப்பா இருப்பார். அப்போது அவர் இவரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். இவருடைய குணம், நடந்து கொள்ளும் விதம் என எல்லாமும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்துதான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

எனக்கு தற்போது குழந்தையும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னுடைய குழந்தையை பார்த்துநான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னுடைய கணவரும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறார்” என்று பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்