Kavithalaya Krishnan: ‘ஒரு போட்டோ கேட்டது குத்தமா.. என்ன அந்த மாதிரி திட்டி.. பாபா படத்தில்..’ - கவிதாலயா கிருஷ்ணன்!
Kavithalaya krishnan: விதியை போட்டதே நான் தான். நான் அதை உடைக்கலாம்… என்று கூறி, வாங்க கிருஷ்ணன்…நாம் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அங்கிருந்த மாடிக்கு அழைத்துச் சென்றார். - கவிதாலயா கிருஷ்ணன்!

Kavithalaya Krishnan: பாபா படப்பிடிப்பில் தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து கவிதாலயா கிருஷ்ணன் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
சரக்கு அடிக்க மாட்டீர்கள்
இது குறித்து அவர் பேசும் போது, “பாபா திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளியூரில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த ஆட்டோக்காரர் கேரக்டரை ரஜினி சார்தான் எனக்கு பரிந்துரைத்து, நடிக்க வைத்தார். இதையடுத்து, ரஜினிகாந்த் அந்த படத்தின் படப்பிடிப்பில் என்னை சந்தித்தார். என்னிடம் உங்களுக்கான சம்பளம் சரியாக இருந்ததா, சாப்பிட்டீர்களா என்றெல்லாம் விசாரித்தார்.
கூடவே, வேறு ஏதாவது வேண்டுமா என்றும் கேட்டார். நான் எதுவும் வேண்டாம் என்று சொன்னேன். ஆனாலும் விடாத அவர், நீங்கள் மது கூட அருந்த மாட்டீர்கள் வேற ஏதாவது வேண்டுமா என்று மீண்டும் கேட்டார். இதையடுத்து, நான் உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். அவர் உடனே ஷூட்டிங் முடிந்த பின்னர் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். நான் சரி என்று கூறிவிட்டேன்.