Yuvan Shankar Raja Biopic: ‘நீ சிரிக்கின்ற போதிலும்’…வருகிறது யுவன் பயோபிக்.. டைரக்டர் யாரு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yuvan Shankar Raja Biopic: ‘நீ சிரிக்கின்ற போதிலும்’…வருகிறது யுவன் பயோபிக்.. டைரக்டர் யாரு தெரியுமா?

Yuvan Shankar Raja Biopic: ‘நீ சிரிக்கின்ற போதிலும்’…வருகிறது யுவன் பயோபிக்.. டைரக்டர் யாரு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
May 09, 2024 03:27 PM IST

Yuvan Shankar Raja Biopic: இந்த இரண்டு படங்களிலுமே, யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கவனிக்கத்தக்கதாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், ‘ஸ்டார்’ புரோமோஷன் தொடர்பான நேர்காணல் ஒன்றில், இயக்குநர் இளன், யுவனின் வாழ்க்கை கதை படம் தொடர்பான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

Yuvan Shankar Raja Biopic: ‘நீ சிரிக்கின்ற போதிலும்’…வருகிறது யுவன் பயோபிக்.. டைரக்டர் யாரு தெரியுமா?
Yuvan Shankar Raja Biopic: ‘நீ சிரிக்கின்ற போதிலும்’…வருகிறது யுவன் பயோபிக்.. டைரக்டர் யாரு தெரியுமா?

இந்த இரண்டு படங்களிலுமே, யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கவனிக்கத்தக்கதாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், ‘ஸ்டார்’ புரோமோஷன் தொடர்பான நேர்காணல் ஒன்றில், இயக்குநர் இளன், யுவனின் வாழ்க்கை கதை படம் தொடர்பான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். 

பயோபிக் தொடர்பான ஒன்லைன்

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ நான் யுவனிடம் அவரின் பயோபிக் தொடர்பான ஒன்லைன் ஒன்றை சொன்னேன். அவருக்கு அது பிடித்திருந்தது. எல்லாம் சரியாக நடந்தால் விரைவில் அந்த ஒன்லைன் தொடர்பான ஸ்கிரிப்ட் வேலைகள் நடக்கும்” என்று பேசி இருக்கிறார்.

முன்னதாக, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் உருவாக இருக்கிறது. இந்தப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப்படத்தை இயக்குகிறார். இளையராஜாவே இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: 

வருகிற அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், 2025ம் ஆண்டு படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா இசையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் இளையராஜா கடந்த 5 தலைமுறைகளாக இசை பயணத்தில் இருக்கிறார். 7000 த்திற்கு மேற்பட்ட பாடல்கள், 1000த்திற்கும் மேற்பட்ட படங்கள், 20,000த்திற்கு மேற்பட்ட இசைக்கச்சேரிகள் என பெரும் சாதனை படைத்திருக்கும் அவருக்கு,கடந்த 2010ம் ஆண்டு பத்ம பூஷன் மற்றும் 2010 ம் ஆண்டு பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

இளையாராஜாவின் பயோபிக்கில் அருண்மாதேஸ்வரன்

இளையாராஜாவின் பயோபிக்கில் அருண்மாதேஸ்வரன் கமிட் செய்யப்பட்டு இருப்பது அனைவருக்கு ஆச்சரியம் அளிப்பதாக அமைந்து இருந்தது. ஆனால், இயக்குநர் அருண்மாதேஸ்வரன் மீதான நம்பிக்கையை கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அருண் பற்றி பேசும் போது, “ அருண் மாதேஸ்வரன் எனக்கு அடிக்கடி வெற்றிமாறனை நியாபகப்படுத்தி வருகிறார். முதன்முறையாக கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதையை அருண் சொன்ன போது, இவர் எப்படி இவ்வளவு பெரிய படத்தை தாங்குவார் என்ற சந்தேகம் வந்தது. அதை அவரிடமே எல்லாமே பெரிய பெரிய விஷயமாக சொல்கிறீர்கள்.. பண்ணிட முடியுமா என்று கேட்டேன். ஆனால் அவர் கூலாக பண்ணிடலாம் என்று கூறினார். படத்தை பார்த்த பின்னர்தான் அருண் சம்பவம் பண்ற கை என்று தெரிந்தது” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.