Kavin New Movie: ‘டாடா’ வெற்றி.. ‘பீஸ்ட்’ பட நடிகருடன் கைகோர்க்கும் கவின்.. கதாநாயகி யார் தெரியுமா?
டிகர் கவின் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார்.
நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் கவின் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. அடிப்படையில் நடன இயக்குநரான சதிஷ் பல முன்னணி நடிகர்களுக்கு பல படங்களில் நடன வடிவமைப்பு செய்ததுடன், சில படங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார். இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அண்மையில் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து கவின் கமிட் ஆகியுள்ள இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது.
சமீபத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ‘அயோத்தி’ பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கவின் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை இளைஞர்களைக் கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.