Kavignar Vaali Memorial Day: கவிஞர் வாலி நடித்துள்ள படங்கள் எத்தனை தெரியுமா?-kavignar vaali do you know how many films kavignar vaali has acted - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kavignar Vaali Memorial Day: கவிஞர் வாலி நடித்துள்ள படங்கள் எத்தனை தெரியுமா?

Kavignar Vaali Memorial Day: கவிஞர் வாலி நடித்துள்ள படங்கள் எத்தனை தெரியுமா?

Manigandan K T HT Tamil
Jul 18, 2023 05:00 AM IST

15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் வாலியின் நினைவு நாள் இன்று.

கவிஞர் வாலி
கவிஞர் வாலி

திருச்சிராப்பள்ளி ஸ்ரீநிவாசன் ரங்கராஜன் என்பது தான் இவரது இயற்பெயர். தமிழ் திரைப்படத் துறையில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர். இவர் கிட்ததட்ட 15,000 பாடல்களை எழுதியிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கோலோச்சினார்.

சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கலைத் துறையில் இவரது பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருதை 2007ம் ஆண்டு வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

ஐயங்கார் பிராமண குடும்பத்தில் பிறந்த வாலியின் பெற்றோர் ஸ்ரீநிவாசன் ஐயங்கார், பொன்னாம்மாள் ஐயங்கார் ஆவர். ஸ்ரீரங்கத்தில் தான் படித்தார். 1950களில் திரைப்படத்தில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.

இவர் நானும் இந்த நூற்றாண்டும் என்ற தலைப்பில் சுயவரலாறை எழுதியிருக்கிறார். அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், தமிழ் கடவுள், கலைஞர் காவியம், கிருஷ்ண பக்தன், வாலிப வாலி உள்ளிட்ட நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய பாடலின் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற வரிகளை திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் செதுக்கியிருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்காக 63 திரைப்படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 70 படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதியிருக்கிறார். 

இவரது மனைவி பெயர் ரமணி திலகம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகிய சில்லனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற நியூயார் நகரம் பாடல் மிகப் பிரபலமானது. கவிஞர் வாலியிடம் பாஸ்போர்ட் கிடையாது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும்.

இவர் எந்தவொரு வெளிநாட்டுக்கும் சென்று இல்லை. ஆனாலும், நியூயார்க் நகர் குறித்து மிகச் சிறப்பாக எழுதியிருப்பார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.