Katrina Kaif: எப்புட்றா.. மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்திய கத்ரீனா கைஃப்
நடிகை கத்ரீனா கைஃப் மெட்டா முதலாளி மார்க் ஜுக்கர்பெர்க்கை மிஞ்சி இருக்கிறார்
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே, வாட்ஸ் அப் நிறுவனனும் சேனல் உருவாகி இருக்கிறது. பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தான் அதிக ஃபாலோயர்களை கொண்ட பிரபலமாக மாறி இருக்கிறது.
இதன் மூலம் அவர் அவர் மெட்டா முதலாளி மார்க் ஜுக்கர்பெர்க்கை மிஞ்சி இருக்கிறார்.
இந்த சேனல்கள் உருவாக்கப்பட்டவுடன், ரசிகர்கள் அவற்றைப் பின்தொடரத் தொடங்கினர். பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஏற்கனவே 1.4 கோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். பிரபல ராப்பரான பேட் பன்னியை விட கத்ரீனாவுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
வாட்ஸ்அப் தனது சொந்த சேனலை உருவாக்கி , இதுவரை 2.3 கோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. அதன் பிறகு பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் 1.68 கோடி பேர் பின்தொடர்பவர்கள் உள்ளனர். 1.44 கோடி ஃபாலோயர்களுடன் ரியல் மாட்ரிட் கிளப் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கத்ரீனா கைஃப் 1.42 கோடி பின்தொடர்பவர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். ராப்பர் பேட் பன்னிக்கு 1.26 கோடி ஃபாலோயர்களும், மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு 92 லட்சம் ஃபாலோயர்களும் உள்ளனர்.
கத்ரீனா கைஃப் செப்டம்பர் 13 அன்று ஒரு வாட்ஸ்அப் சேனலை உருவாக்கினார்..இரண்டு வாரங்களுக்குள் 1.42 கோடி பின்தொடர்பவர்களைப் பெற்றார். இதுவரை அந்த சேனலில் சில செல்பிகளை மட்டுமே பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்