'ஒத்த ரூபா என்னோட பாட்டு.. குட் பேட் அக்லி படத்தில் இருக்கு.. அனுமதியும் வாங்கல.. பாடல் ஆசிரியர்னும்போடல’: கஸ்தூரி ராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'ஒத்த ரூபா என்னோட பாட்டு.. குட் பேட் அக்லி படத்தில் இருக்கு.. அனுமதியும் வாங்கல.. பாடல் ஆசிரியர்னும்போடல’: கஸ்தூரி ராஜா

'ஒத்த ரூபா என்னோட பாட்டு.. குட் பேட் அக்லி படத்தில் இருக்கு.. அனுமதியும் வாங்கல.. பாடல் ஆசிரியர்னும்போடல’: கஸ்தூரி ராஜா

Marimuthu M HT Tamil Published May 16, 2025 11:11 PM IST
Marimuthu M HT Tamil
Published May 16, 2025 11:11 PM IST

' முதலில் போன் பண்ணி அனுமதி கேட்டிருக்கலாம். கேட்டால் தரப்போறோம். அனுமதியும் கேட்கல. என்னோட பாட்டு, குட் பேட் அக்லி படத்தில் இருக்கு. பாடல் ஆசிரியர்னு என் பெயர் போடணுமா இல்லையா. போடல’ என இயக்குநர் கஸ்தூரி ராஜா வேதனைத் தெரிவித்து இருக்கிறார்.

'ஒத்த ரூபா என்னோட பாட்டு.. குட் பேட் அக்லி படத்தில் இருக்கு.. அனுமதியும் வாங்கல.. பாடல் ஆசிரியர்னும்போடல’: கஸ்தூரி ராஜா
'ஒத்த ரூபா என்னோட பாட்டு.. குட் பேட் அக்லி படத்தில் இருக்கு.. அனுமதியும் வாங்கல.. பாடல் ஆசிரியர்னும்போடல’: கஸ்தூரி ராஜா

’கஸ்தூரிராஜா முழுக்க முழுக்க நடிகராகிட்டீங்களா?

முழுக்க முழுக்க இல்லை. மனசுக்குப் பிடிச்ச கதாபாத்திரங்கள் கிடைச்சால், ஒரு நிறைவு இருந்தால், பெயரைக் கெடுக்காமல், தரமான இயக்குநர் என்று பெயர் இருக்கு. அதற்கு சேதாரம் இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களாக கிடைத்தால் நடிக்கலாம்.

என்னென்ன படங்கள் வந்து நடிக்குறீங்க?

முதலில் எனக்கு நடிக்கிறதில் ஆர்வம் இல்லை. எனக்கு வராது. ஹெட்மாஸ்டர் போய் வரிசையில் உட்கார்ந்து படின்னு சொன்ன மாதிரி தான். அப்புறம் மீரா கதிரவன் வந்து ஒரு கதாபாத்திரம் பண்ணுங்கன்னு சொல்லி வந்தார். உடனே, ‘எனக்கு நடிக்க வராது’ன்னு சொன்னேன். கதை முழுக்க என்னை மையமாக வைத்து நகர்ந்தது.நல்லாவும் இருந்தது. எப்படி, இவ்வளவு பெரிய கேரக்டருக்குத் தாங்குவேன். நான் கொஞ்சம்கோபக்காரன் வேற. என்னை தயவுசெய்துவிட்டுடுங்கன்னு சொன்னேன். பிறகு, மீரா கதிரவன் ஒன்னுமில்லை சார், நில்லுங்க நடங்கன்னு சொல்லிக்கூப்பிட்டுப்போனார். முதலில் 8 நாள்னு போனேன். அடுத்து 40 நாள் வைச்சுக்கிட்டாங்க. முதலில் சம்பளம் கொடுக்கிறாங்க. சாப்பாடு போடுறாங்க.கேரவன் கொடுக்கிறாங்க. இடைவெளியில் சாப்பிடக் கொடுக்கிறாங்க. எந்தச்செலவும் நமக்கு இல்லை. இரண்டாவது சீனியர் டைரக்டர்னு ஒரு மரியாதை வேற கொடுக்கிறாங்க. அதனால்,அவர் படத்தில் நடிச்சேன். அது ஒரு போதை ஆகிப்போச்சு. பண்ணிட்டு இருக்கும்போதே, ஃபைவ் ஸ்டார் கதிரேஷன் ஒரு கதை சொன்னார். சசி குமார், நவீன் சந்திராவுக்கு அப்பா கதாபாத்திரம். அடுத்து மூன்றாவதாக, விஜயகாந்த் சாருடைய மகன் சண்முகப் பாண்டியனுக்கும் அப்பாவாக நடிச்சேன். இப்படி மூன்று படங்களில் அப்பா கதாபாத்திரமாக நடிச்சேன். இப்ப கூட, என்டர் தி டிராகன் படத்தில் நடிக்கிறேன்.

'என்னுடைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்’:கஸ்தூரி ராஜா

பொதுவாக உங்ககூட உரையாட வரும்போது கூட, பழைய பாடல்கள் குறித்துப் பேசலாம் என்று வந்தேன்.என்னுடைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஒவ்வொரு பாடல்களுக்கும் இளையராஜா சார் கூடேயும், தேவா கூடேயும் மல்லுக்கட்டுவேன்.

அதில் மூன்றுபாட்டு அல்லோலகல்லோலப்படுது. பஞ்சுமிட்டாய் சீலைகட்டி பட்டு வண்ண ரவிக்கைப்போட்டு பாடலினை கம்போஸ் செய்யும்போது, தேவா கண்ணைமூடிட்டு ’பஞ்சு மிட்டாய் சீலைகட்டின்னுசொல்ல, நான் பட்டு வண்ண ரவிக்கைப்போட்டு' என கண்ணைமூடிக்கிட்டே கம்போஸ் செய்து முடித்தோம். இன்னிக்கும் அது பட்டித்தொட்டியெங்கும் பசுமையாக இருக்கு. என் ராசாவின் மனசிலே படத்துக்கு அப்புறம் நான் ராஜா சார் கூட சேர்ந்து வொர்க் பண்ணல. 5 படம் தேவா கூட வொர்க் பண்ணுனேன். அதிலும் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் வரும் ‘ஒத்தையடி பாதையிலே’ என்னும் பாட்டு ஹிட். அது இன்றைய இயக்குநர்களுக்கு தெரியலப்போலிருக்கு.

’இளையராஜா இசையில் பாடல் எழுத சொந்தப் படம் எடுத்தேன்’: கஸ்தூரி ராஜா

அடுத்து மெளன மொழி என்கிற படத்தில், பாட்டு எழுதியாச்சு. அடுத்து ராஜா சார் இசையில் பாட்டு எழுத ஆசை வந்திடுச்சு. அடுத்து சொந்தமாகப் படம் எடுத்திருவோம்ன்னு கடனை உடனை வாங்கிட்டு, ராஜா சாரை போய்ப் பார்க்கிறேன். சரின்னு படம் பண்ண ஒத்துக்கிட்டார்.

அடுத்து என்ன கதை பண்ணலாம்ன்னு தேனிக்குப் போயிட்டேன். அங்கு என்ன ஒரு திருவிழாவுக்குக் கூப்பிட்டுப்போய், நைட் 12:30 மணிக்கு மேடையில் ஏத்திட்டாங்கே. பனி பெய்யுது. நாட்டுப்புறக்கூத்து நடந்திட்டு இருக்கு. விடியவிடிய ஜனங்கள் உட்கார்ந்திருக்காங்க.

‘ஒத்த ரூபா தாரேன் பாட்டுக்காக 365 நாட்கள் ஓடிய நாட்டுப்புறப்பாட்டு’: கஸ்தூரி ராஜா

அங்க தான், நாட்டுப்புறப்பாட்டுன்னு டைட்டில் கிடைக்குது. அடுத்து அந்த கேங் போற இடம் எல்லாம், 15 நாட்கள் அவங்ககூட சுத்துறேன். அடுத்து தான் பாட்டு வருது. அவங்க பாடினதில் ஒத்த ரூபா தாரேன், ஒரு ஒனப்பத்தட்டும் தாரேன் பாட்டை எழுதிட்டேன். அதை எழுதிக்கொண்டுபோய் ராஜா சார்கிட்ட கொடுத்தால் ஒத்துக்கிற மாட்டியிறார். பிறகு ஒத்துக்கிட்டார். படம், அந்தப் பாட்டுக்காக 365 நாட்கள் ஓடுச்சு.

நாட்டுப்புறப்பாட்டு படத்தில் ஒரு சின்னரோலுக்காக, குஷ்பூகிட்ட போய் பேசுறேன். ரொம்ப பணமில்லை. உங்களுக்கு பணம் கொடுத்தால் சூட்டிங் பண்ணமுடியாத நிலைமைமான்னு சொல்றேன். உடனே, குஷ்பூ நான் பணமே கேட்கலையேன்னு சொல்லிடுச்சு. 36 மணிநேரம் விடாமல் தலையில் கரகத்தை வைச்சு, வொர்க் பண்ணி, ஆடி, அந்தப் பாட்டை முடிச்சுச்சு. படம் 365 நாள் சும்மா ஓடல.

அடுத்து ‘தூதுவளை இலை அரைச்சு’ இந்தப் பாட்டும் பெரிய ஹிட். இந்த மூன்று பாட்டும் நான் தான் எழுதினேன் மீண்டும் அறிவிக்கணும்போல.

’நாகரிகம் இல்லாத குட் பேட் அக்லி படக்குழு’: கஸ்தூரி ராஜா

இப்போது, ‘குட் பேட் அக்லி’ன்னு அஜித் நடிச்ச படத்தில், ஒத்தை ரூபா தாரேன் பாட்டு வருது. எனக்கு முதலில் தெரியாது. நான் புரொடியூசர்மேல் வழக்குப்போடுறதில் எனக்கு விருப்பமில்லை. அவர் நம்ம மக்களுக்கு சாப்பாடு போட்டிருக்கார். இப்போது பார்த்தால், அஜித் சார் பட பாட்டுன்னு போட்டு ஆடுறாங்க; கஸ்தூரி ராஜா பாட்டுன்னு வரல. முதலில் போன் பண்ணி அனுமதி கேட்டிருக்கலாம். கேட்டால் தரப்போறோம். அனுமதியும் கேட்கல.

என்னோட பாட்டு, குட் பேட் அக்லி படத்தில் இருக்கு. பாடல் ஆசிரியர்னு என் பெயர் போடணுமா இல்லையா. போடல. அப்ப இது என்ன நாகரிகம். அவ்வளவு சிரமப்பட்டு, எடுத்திட்டு வந்த பாட்டை கேட்காமல் போட்டால் என்ன இது. சீனியர் என்கிற முறையில் உங்கள் பாடல் வரிகளைப் பயன்படுத்துகிறோம் எனச் சொல்லியிருக்கலாம் தானே’ என இயக்குநர் கஸ்தூரி ராஜா வேதனைப்பட்டிருக்கிறார்.

நன்றி: டூரிங் டாக்கிஸ் யூடியூப்