Kasthuri: மதுமிதாவுக்கு பண்ணது திரும்ப வந்துருக்கு.. வனிதா மேல் வன்மத்தை கக்கிய கஸ்தூரி
வனிதா விஜயகுமார் மீது தாக்குதல் நடந்த நிலையில் அவருக்கு எதிராக நடிகை கஸ்தூரி ட்விட் செய்து உள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமாரை முகத்தில் காயத்துடன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பயங்கரமான புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், “ எனது தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ மட்டுமே. இதை கடந்து செல்ல எனக்கு தகுதி இல்லை.
கொடூரமாக தாக்கப்பட்டது யாரென்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று அழைக்கப்பட்டார். எனது பிக் பாஸ் தமிழ் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்தேன்.
நான் என் சகோதரி சௌமியாஸ் வீட்டில் காரை விட்டு வந்து வந்த போது அந்த இடம் இருட்டாக இருந்தது. எங்கிருந்தோ ஒரு மனிதன் தோன்றி ரெட் கார்டு குடுக்ரீங்களா.
நீ சப்போர்ட் பண்றியா என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார் . என் முகத்தில் ரத்தம் வழிந்தது. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் அருகில் யாரும் இல்லை .நான் என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன்.
இந்த சம்பவத்தைப் காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி என்னை வற்புறுத்தினாள் ஆனால் இந்த சம்பவம் பற்றி சொன்னால் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியும் என்பதால் எனக்கு நம்பிக்கை இல்லை.
நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை தேடினேன். ஆனால் அடையாளம் காண முடியவில்லை. என் காதுகளை ஆட்டிப்படைக்கும் பைத்தியக்காரனைப் போல சிரித்தான். நான் திரையில் தோன்றும் உடல் நிலையில் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் “ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் இந்த விவகாரம் தெரிந்து உடனே பிரதீப், வனிதாவிடம் தனக்கு இதில் சமந்தம் இல்லை என சொல்லி மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப் க்கும் விஜய் டிவி க்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா.
I should show sympathy, but சனியன் இந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் gherao செய்தது நினைவுக்கு வருகிறது... It's only a game அப்போ தெரியலையா? Nobody deserves violence, not just you “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.