Happy Birthday AK: வெறித்தனம்.. பறக்கும் விசில்.. தீனா ரீ ரிலீஸ்.. திணறும் சென்னை திரையரங்கம்
Happy Birthday AK: சென்னை காசி திரையரங்கம் ரசிகர்கள் தீனா படத்தை கொண்டாடும் நிகழ்வு குறித்து பதிவு ஒன்றைய வெளியீட்டு உள்ளனர். அதில், ”காசியில் தீனாவின் கிரேஸ், மிகவும் சத்தமாக ஆரவாரம் மற்றும் கூரைகளை உடைக்கும் அளவுக்கு பறக்கும் விசில்கள் நிறைந்தது” என குறிப்பிட்டது.

நடிகர் அஜித் குமார் நடித்த தீனா திரைப்படம், அவரது பிறந்தநாளை ஒட்டி, தமிழ் நாட்டில் இன்று ( மே 1 ) ரீ- ரிலீஸாகி இருக்கிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து, 2001 ஆம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தீனா. இந்த படத்தில் அஜித் குமாருடன் சேர்த்து, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் நடித்து இருந்தனர். இது ஏ. ஆர். முருகதாஸின் முதல் படம் ஆகும்.
ஆம். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலை ஒட்டி, 2001ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தில் அஜித் குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
இப்படத்துக்குண்டான ஆக்ஷன்மோட் ஒளிப்பதிவினை அரவிந்த் கமலநாதன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் தான் முதன்முதலாக, ‘தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது’ என்னும் வசனத்தை ஸ்டண்ட் மேன் மகாநதி ஷங்கர் பேசியிருப்பார். அன்று முதல் பல ஆண்டுகளாக, தல என ரசிகர்களால் செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார், அஜித். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பெயரை சொல்லி அன்புக்கட்டளையிட்டார், அஜித். மேலும் தன்னை அஜித் என்றும்; ஏ.கே. என்றும் அழைத்தால் போதும் என்றார்.
இப்படத்துக்குண்டான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா செய்திருந்தார். பாடல்களும் செம ஹிட்டானது. இப்படத்துக்குண்டான ஆக்ஷன்மோட் ஒளிப்பதிவினை அரவிந்த் கமலநாதன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் தான் முதன்முதலாக, ‘ தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது ’ என்னும் வசனத்தை ஸ்டன்ட் மேன் மகாநதி ஷங்கர் பேசியிருப்பார்.
அன்று முதல் பல ஆண்டுகளாக, ’தல' என ரசிகர்களால் செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார், அஜித். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பெயரை சொல்லி அழைக்கக் கூடாது என்று அன்புக்கட்டளையிட்டார், அஜித். மேலும் தன்னை அஜித் என்றும்; ஏ.கே. என்றும் அழைத்தால் போதும் என்றார்.
இந்நிலையில் ‘தீனா’திரைப்படம் வெளியாகி 23 வருடங்களுக்குப் பின், அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதியை ஒட்டி, தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது ரசிகர்களை குஷியாகி உள்ளது. மேலும் திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.
மேலும் சென்னை காசி திரையரங்கம் ரசிகர்கள் தீனா படத்தை கொண்டாடும் நிகழ்வு குறித்து பதிவு ஒன்றைய வெளியீட்டு உள்ளனர். அதில், ”காசியில் தீனாவின் கிரேஸ், மிகவும் சத்தமாக ஆரவாரம் மற்றும் கூரைகளை உடைக்கும் அளவுக்கு பறக்கும் விசில்கள் நிறைந்தது.
இந்த ஆண்டு ஏ. கே. யின் பிறந்த நாளுக்கு தீனா (2001) திரைப்படத்தை கொண்டாடுகிறோம் என்று நம்ப முடியவில்லை. வெறித்தனம்” என்று குறிப்பிட்டு உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்