தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthik Subbaraj Shares Thalaivar Rajinikanth Romance Uncut From Petta 5yearsofpetta

Rajinikanth: ஜாதியால எவ்வளவு கொலைகள்.. ‘காதல் வொர்த்து சிம்ரன்’.. என் இனிய பொன்நிலாவே மூடில் ரஜினி!- பேட்ட புது வீடியோ

Kalyani Pandiyan S HT Tamil
Jan 10, 2024 12:39 PM IST

ஆக்‌ஷன், செண்டிமெண்ட், ரிவெஞ்ச் என பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும், சிம்ரனுக்கும் ரஜினிக்கும் இடையே காதல் காட்சிகள் ரசிர்களை வெகுவாக கவர்ந்தன.

  கார்த்தி சுப்புராஜ் பேட்ட!
கார்த்தி சுப்புராஜ் பேட்ட!

ட்ரெண்டிங் செய்திகள்

நண்பனை கொலை செய்த அவனது காதல் மனைவியின் அண்ணனை கதாநாயகன் பழிவாங்குவதே படத்தின் ஒன்லைன். அதரபழைய ஒன்லைன்தான் என்றாலும், கார்த்திக்கின் திரைக்கதை படத்தை ரசிக்க செய்தது. 

ஆக்‌ஷன், செண்டிமெண்ட், ரிவெஞ்ச் என பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும், சிம்ரனுக்கும் ரஜினிக்கும் இடையே காதல் காட்சிகள் ரசிர்களை வெகுவாக கவர்ந்தன. அவர்களது காதல் தொடர்பாக படத்தில் இடம் பெற்ற ‘இளமை திரும்புதே’ பாடல் வின்டேஜ் ரஜினியை நியாபகப்படுத்தி இருக்கும்.

இன்றோடு பேட்ட திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முன்னதாக இளமை திரும்புதே பாடலுக்கு பதிலாக, ரஜினி சிம்ரன் காட்சிகளில் ராஜாவின் என் இனிய பொன்நிலாவே பாடல் இடம் பெற்றது தொடர்பான வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.

 

முன்னதாக, ரஜினிக்கு எதிராக வெயிட்டான வில்லனாக ஆரம்பத்தில் சோப்லாங்கியாக, பின்னர் அலட்டல் இல்லாத வில்லனாகவும் மிரட்டரலான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிப்பு அசுரன் நாவஸுதின் சித்திக் தோன்றியிருப்பார். மற்றொரு வில்லனாக அலட்டிக்கொள்ளாத கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

சசிக்குமார், இயக்குநர் மகேந்திரன், குருசோசமசுந்தரம், ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா, சனத், மேக்னா ஆகாஷ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 90ஸ் கடைசி காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன், 2கே ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷா ஆகியோர் ரஜினிக்கு முதல் முறையாக ஜோடியாக நடித்திருப்பார்கள். மலைாளம், இந்தி சினிமாக்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சசிக்குமார் காதலியாக நடித்திருப்பார்.

இந்த படத்துக்கு முன்னர் வந்த கபாலி, காலா ஆகிய படங்களின் கதை அழுத்தமாக இருந்தாலும் ரஜினி படங்களில் அவரிடம் வெளிபடும் ஸ்டைல், ஸ்கிரீன் பிரசென்ஸ் போன்றவை மிஸ்ஸாவாத ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களின் மொத்த ஏக்கத்தையயும் பேட்ட படத்தில் தீர்த்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.