'துப்பாக்கி வச்சி சுட்டா கேங்ஸ்ட்டர் படமா? எப்படி இதெல்லாம் வெளிய வருதுன்னே தெரியல' கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'துப்பாக்கி வச்சி சுட்டா கேங்ஸ்ட்டர் படமா? எப்படி இதெல்லாம் வெளிய வருதுன்னே தெரியல' கார்த்திக் சுப்புராஜ்

'துப்பாக்கி வச்சி சுட்டா கேங்ஸ்ட்டர் படமா? எப்படி இதெல்லாம் வெளிய வருதுன்னே தெரியல' கார்த்திக் சுப்புராஜ்

Malavica Natarajan HT Tamil
Dec 26, 2024 10:21 AM IST

துப்பாக்கி வச்சி சுடுவது போல் வரும் படம் எல்லாம் கேங்க்ஸ்டர் படம் இல்லை என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

'துப்பாக்கி வச்சி சுட்டா கேங்ஸ்ட்டர் படமா? எப்படி இதெல்லாம் வெளிய வருதுன்னே தெரியல' கார்த்திக் சுப்புராஜ்
'துப்பாக்கி வச்சி சுட்டா கேங்ஸ்ட்டர் படமா? எப்படி இதெல்லாம் வெளிய வருதுன்னே தெரியல' கார்த்திக் சுப்புராஜ்

ரெட்ரோ

ரெட்ரோ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா - பூஜா ஹெக்டே இடையிலான ரெமான்ஸ் காட்சியுடன் டீஸர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த டீசரில் சூர்யாவின் அதிரடி காட்சிகள் திருநெல்வேலி பாஷையுடன் வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளும் இடம்பிடித்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறை நாட்களில் ரெட்ரோ படத்தை வெளியிட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சூர்யா 44 குழு

கார்த்திக் சுப்பராஜ் சொந்த நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டேவுடன் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் ஷங்கர் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஷ்ரேயா சரண் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். படத்துக்கு இசை - சந்தோஷ் நாரயணன். இந்த படத்தின் ஸ்டிரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இது கேங்ஸ்டர் படம் அல்ல

இந்நிலையில், ரெட்ரோ படம் குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எஸ் எஸ் மியூசிக் யூடியூபிற்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் சூர்யா 44 படத்தை அனைவரும் கேங்ஸ்டர் படமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது கேங்ஸ்டர் படம் அல்ல. ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான காதல் படம். இந்தப் படத்தின் மூலக் கதையே காதலை சுற்றி தான் இருக்கும்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு லவ் ஸ்டோரி பண்ணனும்ன்னு ஆசை. இந்த படத்துல நிறைய ஆக்ஷன் இருக்கும் தான். ஆனா இது கேங்ஸ்டர் படம் எல்லாம் இல்ல. இந்தப் படத்த எல்லாம் எப்படி கேங்ஸ்டர் படம்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்கன்னு தெரியல.

ரொம்ப நாள் முன்னாடி யோசிச்ச கதை

இந்தப் படம் பண்ணி முடிச்சப்போ, சூர்யா சார் என் கூட எடுத்த போட்டோ போட்டு பிரதர் ஃபார் லைஃப்ன்னு போஸ்ட் போட்ருந்தாரு. ஆரம்பத்துல அவர வச்சு படம் எடுக்கனும்ன்னு ஆசை. ஒரு நடிகரா அவர பிடிக்கும்.

நான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பண்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட படத்துக்கு கதை சொன்னோம். சூர்யா சார் ரொம்ப புரொஃபசனல். படம் ஆரம்பிச்சு வேலை செய்ய ஆரம்பிச்சப்போ தான் அவரு எவ்ளோ ஜாலியான ஆளுன்னு தெரிஞ்சது. அதும் இல்லாம படத்துல ஜெயராம் சார் எல்லாம் இருக்காங்க. எல்லாரும் ஜாலியான ஆட்கள்ங்குறதால ஷீட்டிங் ஸ்பாட் எப்போவும் ஜாலியா இருக்கும் என்றார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அக்டோபர் மாதம் நிறைவடைந்துள்ளது. முன்னதாக படம் குறித்த அறிவிப்பை டீசர் மூலம் தெரிவித்திருந்தன

ட்ரெண்டாகும் ரெட்ரோ

இதையடுத்து சூர்யா 44 என்ற அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் டீஸர் 2.16 நிமிடங்கள் ஓடுகிறது. #Suriya44 என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.