Jigarthanda Double X: ரஜினி, கமலுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போஸ்டர்! கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி
நான் மட்டும் சில தசாப்தங்கள் முன்னரே பிறந்திருந்தார் ரஜினிகாந்த், கமல்ஹாசனை வைத்து படம் இயக்கியிருப்பேன் என்று கூறிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஆசையை வித்தியாசமாக நிறைவேற்றியுள்ளார் அவரது இணை இயக்குநரான மகேஷ் பாலு.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தளத்தில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட போஸ்டரில் ராகவ லாரன்ஸ் முகத்தை ரஜினியாகவும், எஸ்ஜே சூர்யா முகத்தை கமல்ஹாசனாகவும் மார்பிங் செய்த படத்தை பகிர்ந்துள்ளார். அதில், " நான் பல தசாப்தங்களுக்கு முன்னர் பிறந்திருந்தால், தலைவர் மற்றும் உலக நாயகன் ஆகியோருடன் இணைந்து #ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தை உருவாக்கியிருப்பேன் என்று உதவி இயக்குநர்களிடம் என கனவை தெரிவித்திருந்தேன். இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட எனது இணை இயக்குநர் இவ்வாறு செய்துள்ளார்" என்று ஹக் மற்றும் ஹார்ட் எமோஜிக்களுடன் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் இந்த டுவிட் பதிவை ரசிகர்கள் பலரும் லைக்குகளை க்ளிக் செய்து ரீடுவிட் செய்து வருவதுடன், "இது மட்டும் நடந்த மிகப் பெரிய வெற்றி படமாக அமையும்", இவர்கள் இணையும் படத்துக்கு Once Upon A Time in Kollywood என டைட்டில் வைக்கலாம் எனவும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர். அத்துடன் அவர்கள் இணையும் படம் சிறந்த பிரியாவிடை படமாகவும் இருக்கும் எனவும், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லேகேஷ் கனகராஜ் ஆகியோர் இந்த ஐடியாவை செயல்படுத்த முயற்சிக்கலாம் எனவும் ஒருவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.