தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthik Kumar: நான் ஓரினச்சேரிக்கையாளனா?; ‘மன்னிப்பு கேட்கணும்.. வீடியோவ தூக்கணும்’- சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்

Karthik Kumar: நான் ஓரினச்சேரிக்கையாளனா?; ‘மன்னிப்பு கேட்கணும்.. வீடியோவ தூக்கணும்’- சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்

Kalyani Pandiyan S HT Tamil
May 17, 2024 04:16 PM IST

Karthik Kumar: ‘‘தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு தன்னிடம் சுசித்ரா மன்னிப்புக்கேட்க வேண்டும்.சம்பந்தப்பட்ட சேனல் வீடியோவை தூக்க வேண்டும்” - சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்!

Karthik Kumar: நான் ஓரினச்சேரிக்கையாளனா?; ‘மன்னிப்பு கேட்கணும்.. வீடியோவ தூக்கணும்’- சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்
Karthik Kumar: நான் ஓரினச்சேரிக்கையாளனா?; ‘மன்னிப்பு கேட்கணும்.. வீடியோவ தூக்கணும்’- சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதற்கு ரிப்ளை கொடுக்கும் விதமாக சுசித்ராவிடம், கார்த்திக் பேசியதாக சொல்லி ஆடியோ ஒன்று வைரல் ஆனது. 

அதிர்ச்சி தரும் ஆடியோ!

அந்த ஆடியோவில், கார்த்திக் "நீ மிகவும் அசிங்கமாக பேசுகிறாய், இது படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுவது போல நீ பேசுகிறாய். நீ ஏன் இப்படி பேசுகிறாய். உன் வளர்ப்பு அப்படியில்லையே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானே. நீ நல்ல ஆச்சாரமான பிராமின் குடும்பத்துல இருந்துதானே வந்த” என்று பேசியது போல இருந்தது.

இந்த ஆடியோ வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் “ நான் அப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை” என்று தெரிவித்து இருந்தார். தொடர்ந்து அந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார். 

‘மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’

அதில் அது தன்னுடைய குரல் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு தன்னிடம் சுசித்ரா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று கூறி, தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில் சுசித்ரா பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளதாவும், அதனை உறுதிபடுத்தாமல் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளதாகவும், 

ஆகையால் அதனை சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

முன்னதாக பாடகி சுசித்ரா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி இங்கே! அதில் அவர் பேசும் போது, “ சுசி லீக்ஸை பொருத்தவரை அது தனுஷ், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அடங்கிய கேங் செய்த ப்ராங். ஆனால் அது என்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியான காரணத்தால், நான் பலியாடாகி விட்டேன்.

எனக்கு கவலை இல்லை!

அதற்காக, நான் அவனது தனுஷின் கை காலை நிச்சயமாக உடைப்பேன். சட்டத்தைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையே இல்லை. இதற்காக நான் ஜெயிலுக்கு போவதற்கும் தயாராக இருக்கிறேன். தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்தை பொருத்தவரை, இருவரும் தாங்கள் பிரியப் போகிறோம் என்று சொன்னதற்கு பின்னர், ஐஸ்வர்யா நடந்துகொள்ளும் விதத்தையும், தனுஷ் நடந்து கொள்ளும் விதத்தையும் நீங்கள் பாருங்கள்.

தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றி இருக்கிறார். ஐஸ்வர்யா தனுஷை ஏமாற்றி இருக்கிறார். அவர்கள் தாங்கள் பழகும் நபருடன், ஒன்றாக இணைந்து ஹோட்டலில் சரக்கு அடித்திருக்கிறார்கள். தனுஷ் எனக்கு எதிராக ப்ராங் செய்தது உண்மைதான் என்றாலும், அவனுடைய விவாகரத்து விஷயத்தில், நான் தனுஷின் பக்கமே நிற்கிறேன். 

ஐஸ்வர்யா மீது பாய்ச்சல்!

தனுஷ் இதில் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டு வருகிறார். ஐஸ்வர்யா மிக மிக மோசமான தாய். அவர் சோசியல் மீடியாவில் ரீல்சை போட்டுக்கொண்டு, அவரை ப்ரோமோஷன் செய்து கொள்கிறார். அவர்களுக்குள் ஒத்துவரவில்லை என்று தானே பிரிகிறார்கள். பின்னர் ஏன் அவர்களுக்காக நீங்கள் பாவம் பார்க்கிறீர்கள். ரெண்டு பேருக்கும் 18 வயதிற்கு மேல் ஆகிவிட்டது அல்லவா?

இரண்டு பேரும் பப்பா இல்லை அல்லவா... அப்படி என்றால் அவர்கள் பாவமா… அவர்களது குழந்தைகள் கூட பாவமில்லை... அவர்கள் ஒன்றும் நடுத்தெருவில் நிற்கவில்லையே... இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. விவாகரத்து ஆன பெற்றோர் குழந்தைக்கு எவ்வளவு பாசம் காட்டுவார்கள் தெரியுமா?

ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டு!

ஆகையால் இனி அந்த குழந்தைகளுக்கு அதிகமான அன்பு கிடைக்கும். என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் பிரிந்த பொழுது, நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அவன் தான் அவனுடைய ஓரினச்சேர்க்கை தன்மையை மறைப்பதற்காக உடனே சென்று கல்யாணம் செய்து கொண்டான்.

அவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அவனுக்கு அப்போதே இரண்டு ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூன்று பேரும் ஹோட்டலுக்கு சென்று, ரூம் போட்டு இரவு தங்குவார்கள். அவனை கல்யாணம் செய்து கொண்டு 2 வருடம் ஆன பின்பும் கூட, குழந்தை பிறக்கவில்லை. இதனையடுத்து நாங்கள் மருத்துவரை சென்று சந்தித்தோம்.  அப்போது அவனிடம் தான் பிரச்சனை என்பதை மருத்துவர் உறுதி செய்தார்.” என்று பேசினார். 

எங்களைப் பற்றி!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்