துண்டான கோயில் பூட்டு; மாஸ் என்ட்ரியில் யார் தெரியுமா? -புதிய கார்த்திகை தீபம் எப்படி இருக்கு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  துண்டான கோயில் பூட்டு; மாஸ் என்ட்ரியில் யார் தெரியுமா? -புதிய கார்த்திகை தீபம் எப்படி இருக்கு?

துண்டான கோயில் பூட்டு; மாஸ் என்ட்ரியில் யார் தெரியுமா? -புதிய கார்த்திகை தீபம் எப்படி இருக்கு?

Kalyani Pandiyan S HT Tamil
Nov 11, 2024 02:35 PM IST

துண்டான கோயில் பூட்டு, மாஸ் என்ட்ரியில் கார்த்திக்.. என கார்த்திகை தீபம் சீரியல் களைகட்ட தொடங்கி இருக்கிறது.

துண்டான கோயில் பூட்டு; மாஸ் என்ட்ரியில் யார் தெரியுமா? கார்த்திகை தீபம் அப்டேட்
துண்டான கோயில் பூட்டு; மாஸ் என்ட்ரியில் யார் தெரியுமா? கார்த்திகை தீபம் அப்டேட்

கதையின் கரு என்ன?

கடந்த சனிக்கிழமை தீபாவின் மறைவுடன் முதல் சீசன் முடிவுக்கு வந்த நிலையில், புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாக உள்ள இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஒரு ஊரில் பெரிய அரண்மனை வீடு காட்டப்படுகிறது. அந்த ஊரில் காலம் காலமாக கோயில் ஒன்று பூட்டப்பட்ட இருப்பதால், மழை இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதனால் கோயிலை திறக்க வேண்டும் என ஊரின் பெரிய மனுஷனான ராஜா சேதுபதியிடம் முறையிட ஊர் மக்கள் ஒன்று கூடுகின்றனர்.

 

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ஆனால் ராஜசேதுபதி பூஜை அறையில் சாமியை வணங்கி கொண்டிருக்கிறார். அப்போது பாட்டி, பரமேஸ்வரியிடம் ஒரு பெண் ஒருவர் பெரிய சம்பட்டியை எடுத்து கோயில் பூட்டை உடைத்து, கோயிலை திறக்க, கோயிலுக்குள் இருந்து ஒளி வருவது போல கனவு கண்டதாக சொல்ல, இறுதியாக கோயிலை திறக்க முடிவுசெய்யப்படுகிறது.

பிறகு எல்லோரும் கோயிலை திறப்பதற்காக கோயில் அருகே ஒன்று கூட, விருமன் என்பவன் நீங்கள் விருப்பப்பட்டால் கோயிலை திறப்பதற்கும், தேவையில்லை என்றால் மூடுவதற்கும் கோயில் என்ன உங்க வீட்டுக்கு பீரோவா என கேள்வி எழுப்பி பிரச்சினை செய்கிறான். தொடர்ந்து, உங்க பையன் வந்தா தான் கோயிலை முறையா திறக்க முடியும் என்று சாடுகிறான்.

இதனால் ராஜசேதுபதி கோயிலை திறக்க முடியாமல் திரும்பிச்செல்ல, ஒருவன் பெரிய சம்பட்டி எடுத்து பூட்டை அடித்து உடைத்து கோயிலை திறக்கிறான். யார் என்று பார்த்தால் அது கார்த்திக் என்று தெரிய வருகிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? கார்த்திக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? கார்த்தியின் முடிவால் அடுத்து நடக்கப் போவது என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

தீபாவின் இறப்பை தாங்க முடியாமல், மொத்த குடும்பமும் கண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அதன் பிறகு தீபாவை அடக்கம் செய்யும் வேலைகள் நடந்தன. அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் தீபாவை பற்றியும் தீபா மருமகளாக வந்தது பற்றியும் கண்ணீருடன் பேசினர்.

கைது செய்ய வந்த போலீஸ்

இதையடுத்து போலீஸ் கார்த்திக் வீட்டிற்கு வந்து கீதாவை கைது செய்ய வந்ததாக கூறினார்கள். அப்போது கார்த்திக் கீதாவிடம் நீங்க பயப்படாமல் இவங்க கூட போங்க.. உங்களுக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் உங்களை காப்பாற்றுவேன் என்றும்உங்களை கண்டிப்பா வெளியே கொண்டு வருவேன் என்று சொல்ல, கீதா போலீசாரால் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்பட்டாள்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.