Karthigai Deepam:‘பத்திரிக்கையில் மாறிய பெயர்.. கார்த்தியை சிக்க வைக்க பிளான் போட்ட சந்திரகலா!’-கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: பத்திரிக்கையில் மாறிய பெயர்.. கார்த்தியை சிக்க வைக்க பிளான் போட்ட சந்திரகலா - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாத்தாவை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக், சாமுண்டேஸ்வரி குடும்பத்தை சமாளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மைண்ட் வாய்ஸில் ஆப்பு
அதாவது, சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு பேசி கொண்டிருக்கும் போது, ஒருவன் ரேவதியின் கல்யாண பத்திரிக்கை தயாராகி விட்டதாக சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். இதை பார்த்த சந்திரகலா, உனக்கு இப்போ இருக்குடா ஆப்பு என மைண்ட் வாய்ஸில் பேசி கொள்கிறாள்.
சாமுண்டீஸ்வரியும் நல்ல விஷயம் என்று சொன்னாள்
அடுத்ததாக ராஜராஜன் பத்திரிகையை கொண்டு போய் குலதெய்வ கோயிலில் வைத்து பூஜை செய்து வரலாம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியும் நல்ல விஷயம் அப்படியே செய்து விடலாம் என்று சொல்லி விட்டாள். இந்த சமயத்தில், சந்திரகலா பத்திரிக்கை எப்படி வந்து இருக்குன்னு பார்க்கணும் என்று சொல்லி பிரித்து பார்க்கட்டுமா என அனுமதி கேட்டாள்.
சாமுண்டீஸ்வரி கேட்ட கேள்வி:
சாமுண்டீஸ்வரி இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி கேட்குற பிரித்து பாரு என்று சொல்ல, சந்திரகலா பத்திரிக்கையைப் பிரித்து பார்த்து மகேஷ் என்ற பெயருக்கு பதிலாக கணேஷ் என்று இருக்கிறது. ட்ரைவர் தான் அந்த கணேஷ் போல என்று கூறியதோடு, ரேவதி கழுத்தில் தாலிக்கட்ட தான் இப்படி செய்து இருக்கிறான் என்று சொல்ல ரேவதி அப்படியே ஷாக் ஆகிறாள்.
அவனை அவன் ஊர்ல எல்லாரும் கிங்குனு தான்
கார்த்திக், கணேஷ் என் பெயர் இல்லை என்று சொல்ல சந்திரகலா அப்படின்னா உன் பேர் என்ன? இதுவரைக்கும் நீ பேரே சொன்னது இல்லை என்று பிரச்சினை செய்தாள். ஆனால், எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான். சந்திரகலா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்க, மயில்வாகனம் அவனை அவன் ஊர்ல எல்லாரும் கிங்குனு தான் கூப்பிடுவாங்கலாம். அவன் பேர் ராஜா என்று சொல்கிறான்.
ரேவதிக்கு செவிலியர் வைத்த கோரிக்கை
அடுத்து ரேவதி செவிலியருக்கு போன் செய்து குழந்தை தீபாவை குறித்து விசாரிக்கிறாள். செவிலியரும் குழந்தையை சீக்கிரம் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க, அவளும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறாள் என்று சொல்கிறார்.
அடுத்தது என்ன நடக்கும்?
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு: வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்