Karthigai Deepam: ‘கார்த்தியிடம் நகையை கொடுத்து கண்டிஷன் போட்ட பாட்டி’- நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: சந்திரகலா, சிவனாண்டி மற்றும் மாயா என மூவரும் கூட்டு சேர்ந்து அந்த டிரைவர் மற்றும் மயில் வாகனத்திடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என பேசிக் கொண்டனர் - கார்த்திகை தீபம் பேட்டி

Karthigai Deepam: கார்த்தியிடம் நகையை கொடுத்து கண்டிஷன் போட்ட பரமேஸ்வரி பாட்டி.. நலங்கு பங்ஷனில் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமியாடி உன் பொண்ணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும், ஆனா நீ நினைச்சது நடக்காது என குறி சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதி கல்யாணம் நல்லபடியா?
அதாவது, கருப்புசாமி சொன்ன குறி சாமுண்டீஸ்வரி சிந்தனையில் இருக்க, உள்ளே வந்த சந்திரகலா நீங்க கவலைப்படாதீங்க அக்கா, அதான் ரேவதி கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு சொல்லி இருக்காங்களே என்று ஆறுதல் படுத்துகிறாள். அடுத்ததாக சந்திரகலா சிவனாண்டி மற்றும் மாயா என மூவரும் கூட்டு சேர்ந்து அந்த டிரைவர் மற்றும் மயில் வாகனத்திடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என பேசிக் கொள்கின்றனர்.
நலங்கு நீதான் வைக்கணும்
இதனைத் தொடர்ந்து, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் தாத்தா ராஜா சேதுபதியை சந்திக்க வீட்டுக்கு வருகின்றனர். அப்போது கோயிலில் நடந்த விஷயத்தையும், நாளைக்கு ரேவதிக்கு நலங்கு வைக்கிறார்கள் என்ற விஷயத்தையும் கூறுகின்றனர். அப்போது, முறை பையனா நீ தான் நலங்கு வைக்கணும் என பாட்டி பரமேஸ்வரி சொல்கிறார்.
முறை பையனா நீ தான்
கார்த்திக் அது எப்படி முடியும்..? அப்படி பண்ண தப்பாகிடும் என்று சொல்ல, பரமேஸ்வரி பாட்டி கொஞ்ச நகைகளை கொடுத்து, முறை பையனா நீ தான் முறை செய்யணும் என்று கண்டிஷன் போடுகிறார். மேலும் மயில்வாகனத்திடம் நாங்க தான் நேர்ல வர முடியாது எங்களுக்கு வீடியோ கால்ல அங்கு நடக்கிறது காட்டு என சொல்கிறார்.
தாய்மாமன் ஆஜர்
அடுத்த நாள் ரேவதிக்கு நலங்கு வைக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்க, ரேவதி தயாராகி வெளியே வர தாய்மாமன் தான் நலங்கு வச்சு தொடங்கி வைக்கணும்.. யாராவது இருக்கிறார்களா என உறவினர்கள் கேட்க, மயில் வாகனம் இருக்கிறார்களே நம்ப டிரைவர் இருக்காரு என்று சொல்ல எல்லோரும் குழப்பம் அடைகின்றனர்.
சாமுண்டீஸ்வரி தம்பி மாதிரி
டிரைவர் சாமுண்டீஸ்வரி அத்தைக்கு தம்பி மாதிரி, அப்போ ரேவதிக்கு மாமா முறை தானே என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்