தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா!

Karthigai Deepam: தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா!

Aarthi Balaji HT Tamil
May 15, 2024 11:41 AM IST

Karthigai Deepam: ரம்யா தனது கேபினில் இருந்து தீபாவை கூப்பிட்டு அவன் தான் தன்னுடைய காதலன் என்று கார்த்தியை கை காட்ட தீபா பார்க்கும்போது கார்த்திக் அங்கே இல்லாமல் இருக்க வேறொருவனை பார்த்து ரம்யாவின் காதலன் என தப்பாக புரிந்து கொள்கிறாள்.

தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா
தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா காதலனாக கார்த்தியை அறிமுகம் செய்ய தீபாவை ஃபேக்டரிக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தவறான புரிதல்

அதாவது, ரம்யா தனது கேபினில் இருந்து தீபாவை கூப்பிட்டு அவன் தான் தன்னுடைய காதலன் என்று கார்த்தியை கை காட்ட தீபா பார்க்கும் போது கார்த்திக் அங்கே இல்லாமல் இருக்க வேறொருவனை பார்த்து ரம்யாவின் காதலன் என தப்பாக புரிந்து கொள்கிறாள்.

இதே நேரத்தில் செக்யூரிட்டிக்கு காசு கொடுத்து உள்ளே வந்திருந்த ஐஸ்வர்யா இங்கு நடப்பதை பார்த்து ரம்யா காதலிப்பது கார்த்தி தான் என்பதை புரிந்து கொள்கிறாள். உடனே இதை வைத்து நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று ரியாவை சந்தித்து விஷயத்தை சொல்கிறாள்.

அடுத்ததாக ரம்யா ஒரு டெண்டர்காக பிஏவை கூப்பிட்டு ஒரு அமௌன்ட் சொல்லி அதை வைத்து கொட்டேஷன் ரெடி பண்ண சொல்கிறாள். அந்த பிஏ ஆனந்துக்கு போன் போட்டு இவ்வளவு அமௌன்ட் கொட்டேஷன் கொடுத்து இருக்காங்க நீங்க அதுக்கு ஏத்த மாதிரி பார்த்து பண்ணுங்க எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்கிறான்.

அடுத்ததாக நடக்க போவது என்ன

அதைத்தொடர்ந்து ரம்யா அவசர அவசரமாக கார்த்தியை கூப்பிட்டுக் கொண்டு டென்டருக்கு கிளம்ப கார் ஸ்டார்ட் ஆகாத நிலையில் கார்த்திக் பைக்ல போலாமா என்று கேட்டு இருவரும் பைக்கில் கிளம்பி செல்கின்றனர். இதைப் பார்த்த பெண் ஒருவர் தீபாவுக்கு போன் போட்டு கார்த்தி ஒரு பொண்ணோட செல்வதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோட்டில், தீபாவும், ரம்யாவும் கோயிலில் சந்திக்க, தீபா கல்யாண பேச்சை எடுக்கிறாள். ஆனால், ரம்யா அமைதியாகவே நிற்கிறாள், இதனால் தீபா நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்று கேட்க, ரம்யா ஆமாம் என்று கூறுகிறாள். யார் என்று கேட்ட போது, என்னுடைய ஆபீஸ் எம்பிளாயி ஒருத்தரை லவ் பண்றேன் என்று சொல்லி, கார்த்திக்கை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்கிறாள்.

இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா, ஒருவேளை அந்த நபர் கார்த்தியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்