Karthigai Deepam: தீபாவின் பாட்டால் நடந்த அதிசயம்.. கண்விழித்த அபிராமி, ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவின் பாட்டால் நடந்த அதிசயம்.. கண்விழித்த அபிராமி, ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்

Karthigai Deepam: தீபாவின் பாட்டால் நடந்த அதிசயம்.. கண்விழித்த அபிராமி, ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்

Aarthi Balaji HT Tamil
Published Jul 13, 2024 01:26 PM IST

Karthigai Deepam: மைதிலி அண்ணி தான் இந்த சாமியார் பத்தி சொன்னாங்க.. பிறகு ரம்யா தான் சாமியார் குறித்த தகவல்களை தேடிப் பிடித்தாள். யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் எனவும் சொல்லி விட்டதாக சொல்கிறாள்.

தீபாவின் பாட்டால் நடந்த அதிசயம்.. கண்விழித்த அபிராமி, ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்
தீபாவின் பாட்டால் நடந்த அதிசயம்.. கண்விழித்த அபிராமி, ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய ( ஜூலை 12 )எபிசோடில் தீபா பாட்டு பாட தயாராக ரம்யா தீபாவுக்கு விஷத்தை கலந்த பானகத்தை கொடுக்க திட்டம் போட்டு கடைசியில அது அவளுக்கே ஆப்பாக அமைந்த நிலையில் இன்றும்( ஜூலை 13 ) நாளையும் ( ஜூலை 14 ) நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம் வாங்க.

அதாவது, தீபா பாட்டு பாட தொடங்க அவள் அங்கு பாடப் பாட அபிராமிக்கு உடலில் அசைவுகள் ஏற்பட்டு தீபா பாடி முடித்ததும் கண் திறக்க ரம்யா எல்லாத்துக்கும் காரணம் நான் பரிகாரம் செய்தது தான் என்று கிரெடிட்டை எடுத்துக் கொள்கிறாள். இதைப் பார்த்து தீபா கொஞ்சம் வருத்தப்பட கார்த்திக் அம்மா குணமாக உங்களுடைய பாட்டு தான் காரணம்னு எனக்குத் தெரியும் என்று ஆறுதல் சொல்கிறான்.

யாரிடமும் சொல்ல வேண்டாம்

அதை தொடர்ந்து கார்த்திக், அபிராமியை சந்தித்து நீங்க கூடிய சீக்கிரம் பழைய படி திரும்பி வீட்டுக்கு வரணும் என்று எமோஷனலாக பேசுகிறான். அடுத்ததாக கார்த்திக் தீபாவை கூப்பிட்டு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தீர்களே எதுக்கு அப்படி ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தீங்க என்று கேட்க அத உங்களுக்கு மட்டுமில்லாமல் ரம்யாவுக்கும் அனுப்பி இருந்தேன்.. மைதிலி அண்ணி தான் இந்த சாமியார் பத்தி சொன்னாங்க.. பிறகு ரம்யா தான் சாமியார் குறித்த தகவல்களை தேடிப் பிடித்தாள். யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் எனவும் சொல்லி விட்டதாக சொல்கிறாள்.

சாமியார் பெயரை கேட்ட மைதிலி

அதன் பிறகு மைதிலி சாமியார் பெயரை கேட்க தீபா ஒரு பெயரை சொல்ல இது நாம சொன்ன சாமியார் இல்லையே என்பது தெரிய வருகிறது. அடுத்ததாக கார்த்திக், ரம்யாவை சந்தித்து எதுக்கு இப்படியெல்லாம் பரிகாரம் பண்ணீங்க என்று கேட்க தீபாவுக்காக செய்ததாகவும் சாமியார் தான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லிவிட்டதாகவும் சொல்கிறாள்.

சாமியார் மேல் சந்தேகம்

கார்த்திக் அந்த சாமியார் மேல எனக்கு சந்தேகமா இருக்கு அவரை நான் பார்க்கணும் என்று சொல்லி ரம்யாவை கூட்டிக்கொண்டு அவரை தேடிக் கிளம்புகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.