தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthigai Deepam Tamil Serial Latest Episode Update On Today

Karthigai Deepam: உயிருக்கு போராடும் தர்மலிங்கம்.. அடுத்து நடக்க போவது என்ன? - பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்!

Karthikeyan S HT Tamil
Mar 09, 2024 05:31 PM IST

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட தீபா பாட கிளம்ப கார்த்திக் உண்மையை மறைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதாவது, கார்த்திக் தீபாவை ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்து விட இசையமைப்பாளர் ரக்ஷன் பாடலை கொடுத்து இது தான் நீங்க பாட வேண்டியது என்று சொல்ல தீபா அது அப்பா பாடலாக இருப்பதை பார்த்து எமோஷனலாகிறாள். உடனே அப்பா கிட்ட பேசணும் என்று ஏங்குகிறாள். மறுபக்கம் கோகிலா தீபாவுக்கு தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்லி அவள் பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் போட்டு ஸ்டூடியோவிற்கு கிளம்பி வர அவளை உள்ளே விட மறுக்கின்றனர். அடுத்து தீபா எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பாடி முடிக்கிறாள். ரக்சன் பாடியதற்கான பணத்தை செக்காக கொடுக்க தீபா மிகுந்த சந்தோசம் அடைகிறாள்.

ஜானகிக்கு போன் செய்ய அவர் அப்பா முருகன் கோவிலுக்கு போய் இருக்கார் என்று பொய் சொல்லி போனை வைக்கிறார். ஹாஸ்பிடலில் டாக்டர்கள் தர்மலிங்கத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்கின்றனர். கார்த்திக் ஹாஸ்பிடல் பார்மில் கையெழுத்து போட்டு கொடுக்கிறான்.

மறுபக்கம் கோகிலா தீபாவுக்கு தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்லி அவள் பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் போட்டு ஸ்டூடியோவிற்கு கிளம்பி வர அவளை உள்ளே விட மறுக்கின்றனர். அடுத்து தீபா எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பாடி முடிக்கிறாள். ரக்சன் பாடியதற்கான பணத்தை செக்காக கொடுக்க தீபா மிகுந்த சந்தோசம் அடைகிறாள்.

இதை உடனே அப்பா கிட்ட கொடுக்க வேண்டும் என்று கிளம்ப கார்த்திக் அவளை பிக்கப் செய்து அழைத்து செல்கிறான். போகும் வழியில் தீபா காரை நிறுத்த சொல்லி அப்பாவுக்கு பிடித்தவற்றை வாங்க கார்த்திக் தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா உடைந்து போகிறாள். கண்ணீருடன் அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்குள் ஓடி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில், படுக்கையில் கிடைக்கும் தர்மலிங்கம் கார்த்தியை கூப்பிட்டு என் பொண்ணு எப்படியாவது பாட வச்சிடுங்க மாப்பிள என்று கெஞ்ச இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய வேண்டாம் என்று கார்த்திக் தர்மலிங்கம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.

தனது வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தை சொல்லி தீபாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று சொல்கிறான். ஐஸ்வர்யாவிடமும் அண்ணி உங்ககிட்ட ரெடக்வெஸ்ட்டா கேட்டுக்குறேன் இந்த முறையாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்கிறான். இப்படியாக முடிந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்