கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்

கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 18, 2024 03:08 PM IST

கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் சீரியலின் அப்டேட்டை பார்க்கலாம்.

கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்
கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியின் நிச்சயதார்த்தத்துக்கான வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

 

இழுத்து போட்டு செய்த கார்த்திக்

அதாவது, சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்கு வர, எல்லா வேலைகளும் பக்காவாக நடக்க, அதை பார்த்து ஆச்சரியமடைகிறாள். அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெரியவரிடம் எல்லா வேலைகளும் சரியா போகுதா என்று விசாரிக்க, எல்லாம் நல்லபடியாக போகுது; உங்க ட்ரைவர் உங்க வீட்டில் ஒருத்தர் மாதிரி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யுறாரு என்று என்று பெருமையாக சொல்கின்றனர்.

மறுபக்கம் கார்த்தியின் பாட்டி முருகனிடம்.. என்ன முருகா இது? ரேவதிக்கும் என் பேரனுக்கும் கல்யாணம் நடக்கும்னு ஆசையா இருந்தேன்.. சித்தரும் அப்படி தான் சொன்னாரு.. ஆனால் இப்போ ரேவதிக்கு வேறொருத்தனோடு நிச்சயதார்த்தம் நடக்க போகுதுனு சொல்றாங்க, இதெல்லாம் நீ பார்த்துட்டு சும்மாவா இருக்க என்று புலம்புகிறாள்.

நேரில் வந்த முருகன்

உடனே எதிரில் குழந்தை ரூபத்தில் தோன்றிய முருகன் உனக்கு என்ன தான் பாட்டி பிரச்சினை? எதுக்கு ஓயாமல் என்னை திட்டிகிட்டே இருக்க என்று கேட்க, பரமேஸ்வரி பாட்டி மீண்டும் புலம்புகிறாள். முருகன் கண்டிப்பாக கார்த்திக்கும், ரேவதிக்கும் தான் கல்யாணமா நடக்கும். இதெல்லாம் என் சித்து விளையாட்டு. நீ நினைக்கிறது எல்லாத்தையும் உடனே நடத்தி வச்சிட்டா என்னை மறந்துட மாட்டியா என்று பதில் சொல்கிறார்.

மேலும் நீ கல்யாணத்துக்கு போ எனவும் சொல்லி, முருகன் அங்கிருந்து மறைகிறான். மறுபக்கம் மகேஷ் மற்றும் மாயா என இருவரும் ஆட்டோவில் வந்து இறங்க அவர்களை வரவேற்கும் சாமுண்டீஸ்வரி.. சொல்லி இருந்தா கார் அனுப்பி இருப்பேனே என்று சொல்கிறாள். எல்லாரும் கழுத்து நிறைய நகைகளுடன் இருக்க ஒன்றும் இல்லாமல் இருக்கும் மாயா முகம் டல்லாகிறது.

இதை கவனித்த மகேஷ் என்னாச்சு என்று விசாரித்து பிறகு ரேவதியை சந்தித்து விஷயத்தை சொல்ல, அவள் தன்னுடைய நகைகளை கொடுத்து போட்டு கொள்ள சொல்கிறாள். ஸ்வாதியும் போட்டுக்கோங்க.. நாங்க உங்களை பிரித்து எல்லாம் பார்க்க மாட்டோம் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.