Karthigai Deepam : கடத்தப்பட்ட மீனாட்சி.. கார்த்திக் செக் மேட் வைத்த ரியா, ரம்யா!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் வார இறுதி தினங்களில் ரம்யா மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பாக பார்க்க தீபா அவளை பிடித்து என் ஹஸ்பண்ட் உன்னை பார்க்கணும்னு சொன்னாரு வா என்று கூட்டிச் சென்று கார்த்திக் முன்னாடி நிறுத்தி இவதான் அம்மு என்று அறிமுகம் செய்கிறாள்.

Karthigai Deepam: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மது ரியாவுக்கு போன் செய்து நான் தற்கொலை பண்ணிக்க போறேன் அதுக்கு காரணம் நீதானே எழுதி வைக்கப் போறேன் என மிரட்டிய நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ரியா மதுவை பார்க்க வர மது தற்கொலை செய்வதற்காக செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்து கேமராவையும் ஆன் செய்து வைக்கிறான். வீட்டுக்கு வந்த ரியாவிடம் நான் தற்கொலை பண்ணிக்க கூடாதுன்னு என் கூட வந்து வாழு. என்கிட்ட இப்ப 10 லட்சம் ரூபாய் இருக்கு, நாம அதை வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழலாம் என்று சொல்கிறான்.
10 லட்ச ரூபாயா?
ரியா என்னது 10 லட்ச ரூபாயா? நான் பல கோடிக்கு சொந்தக்காரி ஆக போறேன். கூடிய சீக்கிரம் அபிராமி அருணாச்சலத்தை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி கார்த்திக் அருண் ஆகியோரை வீட்டை விட்டு வெளியே தள்ளி அந்த மொத்த சொத்துக்கும் சொந்தக்காரியாக போற அதுக்குத்தான் ஆனந்த காதலிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது நீ 10 லட்ச ரூபாய்க்கு என்னை வானு கூப்பிடுற என்று சொல்லி பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.