Karthigai Deepam:கிழிந்து தொங்கிய கீதாவின் முகத்திரை;அதிர்ச்சியில் அபிராமி- கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: “கார்த்திக் வேறு வழியின்றி இது தீபா இல்ல தீபா மாதிரியே இருக்கிற கீதா என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து, தீபா எங்க இருக்கா என்றே தெரியவில்லை என்று சொல்ல அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.” - கார்த்திகை தீபம் அப்டேட்!
கீதா கழுத்தில் தாலி
அதாவது, தீபாவும், நர்ஸ் சக்தியும் கோயிலுக்குள் வந்து ஒளிந்து கொள்கின்றனர். இன்னொரு பக்கம், அபிராமி தாலியை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்து, தீபா கழுத்தில் கட்டுப்பா என்று சொல்ல கார்த்திக், கீதா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். அதனை தொடர்ந்து, கார்த்திக் வேறு வழியின்றி இது தீபா இல்ல தீபா மாதிரியே இருக்கிற கீதா என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து, தீபா எங்க இருக்கா என்றே தெரியவில்லை என்று சொல்ல அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.
அதன் பிறகு அபிராமி கீதாவிடம், கார்த்திக் என்னை காப்பாற்ற தான் இப்படி பண்ணி இருக்கான். நீ தீபான்னு நினைச்சி தான் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்லி, மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். அதே கோயிலில் தீபாவும் நர்ஸ் சக்தியும் ஒளிந்திருக்க, கார்த்திக் அவர்களை பார்ப்பானா என்ற பில்டப் எகிறுகிறது. ஆனால், அவன் பார்க்காமல் மிஸ் ஆகி விடுகிறது.
இன்னொரு பக்கம் துங்கா, தீபாவும் சக்தியும் சென்ற ஆட்டோவை வழி மறித்து, எங்கே அவங்க என்று விசாரிக்க, ஆட்டோ ட்ரைவர் அவங்க பாதியில் இறங்கி விட்டதாக சொல்லி, சமாளித்து மீண்டும் திரும்பி வந்து கோயிலில் இருந்து இவர்களை அழைத்து செல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்ககள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
நர்ஸ் ஷக்தி, தீபாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தாள். தீபாவை பரிசோதனை செய்த டாக்டர், அவங்க ரொம்ப வீக்காக இருக்காங்க என்று சொன்னார். பிறகு ஷக்தி மீண்டும் தீபாவை அழைத்து கொண்டு, அதே ஆட்டோவில் ஏறினாள்.
கார்த்திக்கை பார்க்க வேண்டும்
ஆட்டோ ட்ரைவர் ஆசிரமத்துக்கு தான் போகணுமா என்று கேட்க, இல்ல, கார்த்திக்கோட மியூசிக் கம்பெனிக்கு போங்க என்று சொன்னாள். இதனையடுத்து அவர்கள் கம்பெனிக்கு வந்து கார்த்திக்கை பார்க்க வேண்டும் என்று விசாரிக்க, கார்த்திக் சார் இல்ல, அவரோட அண்ணன் அருண் தான் இருப்பதாக அவரது அலுவலகத்தில் இருப்பவர்கள் கூறினர்.
இந்த நிலையில், ஷக்தி அருணை பார்த்து விட்டு செல்லலாம் என்று காத்திருக்க, அருணை கோயிலுக்கு அழைத்து செல்ல ஆபிஸ் வந்தாள். ஐஸ்வர்யா. இதை பார்த்த ஷக்தி மறைந்து கொண்டாள். ஐஸ்வர்யா உள்ளே வந்து அருணை அழைக்க, அவன் என்ன பார்க்க நர்ஸ் ஷக்தினு யாரோ வந்திருக்காங்களாம்.
சிசிடிவி காட்சி
அவங்க வெளியே தான் இருக்காங்க, கூட்டிட்டு வா பார்த்துட்டு போய்டலாம் என்று சொல்ல, ஷக்தி என்ற பெயரை கேட்டதும் ஐஸ்வர்யா ஷாக்காகி வெளியே வர, அதற்குள் இவர்கள் அங்கிருந்து எஸ்கேப்பாகி விட்டனர். ஐஸ்வர்யா சிசிடிவி காட்சியை பார்த்து விட்டு துங்காவிற்கு தகவல் கொடுக்க, அவன் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றான்.
இதனால் ஷக்தி, தீபாவை ஒரு கோயிலுக்குள் மறைத்து வைத்தாள். இதே கோவிலுக்கு தான் அபிராமி எல்லாரையும் அழைத்து வந்திருந்தாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்