தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. தீபா கையில் சிக்கிய ஐஸ்வர்யா போன் - கார்த்திகை தீபம்

Karthigai Deepam: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. தீபா கையில் சிக்கிய ஐஸ்வர்யா போன் - கார்த்திகை தீபம்

Aarthi Balaji HT Tamil
Apr 06, 2024 01:35 PM IST

கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதாவது, தீபா ஐஸ்வர்யா இல்லாத நேரமாக அவளது ரூமுக்குள் நுழைந்து போனை எடுத்து ஆராய நார்மல் கால் லிஸ்டில் புது நம்பர் எதுவும் இல்லாமல் இருக்க வாட்ஸப் கால் சென்று பார்க்க புது நம்பர் இருக்கிறது. அந்த நம்பருக்கு கால் பண்ணும் பொது ஐஸ்வர்யா வந்து போனை பிடிங்கி தீபாவை வெளியே துரத்தி விடுகிறாள்.

அடுத்து அபிராமி ஹாஸ்பிடலில் இருக்க ரவுடி அவரை தேடி அலைகிறான், ஒரு கட்டத்தில் அபிராமியை ஹாஸ்பிடலில் சேர்த்த டிரைவரின் போன் நம்பரை கண்டு பிடித்து அபிராமி என்னுடைய அம்மா தான், எந்த ஹாஸ்பிடலில் சேர்த்தீங்க என்று கேட்டு தெரிந்து கொண்டு ஹாஸ்பிடல் வந்து பார்க்கிறான், அங்கு அபிராமி இருக்க நைட்டோடு நைட்டாக கடத்த பிளான் போடுகிறான்.

இதனையடுத்து ஆட்டோ ட்ரைவர் வீட்டிற்கு வர ராணி டல்லாக இருக்க என்னாச்சு என்று கேட்க கார்த்திக் சாரோட அம்மாவை காணோம் என்ற விஷயத்தை சொல்கிறார், இவர் சீக்கிரம் கிடைச்சிடுவாங்க என்று சொல்லி வெளியே கிளம்பும் போது நானும் ஒருத்தருக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தேன், பெரிய வீட்டு பெண்மணி போல இருந்தாங்க. நீ அவங்க போட்டோவை காட்டு என்று கேக்க ராணியும் காட்ட அது அபிராமி தான் என்ற உண்மை தெரிய வருகிறது.

உடனே இவர்கள் இந்த விஷயத்தை சொல்ல கார்த்திக் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர், ஐஸ்வர்யா ரவுடி மணிக்கு போன் போட்டு அபிராமி குறித்து விசாரிக்க அவன் இருக்கும் இடம் தெரிந்து போச்சு, நைட்டோட நைட்டா தூக்கிடுறோம் என்று சொல்கிறான். இவர்கள் வெளியே நின்று பேசி கொண்டிருக்கும் நேரத்தில் ராணியும் அவளது கணவரும் வர தடுத்து நிறுத்தி யார் என்னவென்று விசாரிக்க அபிராமி பற்றி சொல்கின்றனர்.

ஐஸ்வர்யா இவங்க கார்த்தியை பார்த்த பிரச்னையாகிடும் என்று அவர்களிடம் நல்லவள் போல் பேசி அனுப்பி வைக்க வழியில் தீபா இவர்களை பார்த்து விட தீபாவிடமும் எல்லா உண்மையையும் சொல்கின்றனர். தீபா அவர்களை வீட்டிற்கு கூட்டி வந்து கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறாள். ராணி முதலில் இவங்க கிட்ட தான் விஷயத்தை சொன்னோம் என்று கை காட்ட அவர்களும் ஆமாம் அதனால் தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கோம் என்று சமாளிக்கின்றனர்.

உடனே கார்த்திக் மற்றும் தீபா ஹாஸ்பிடல் கிளம்பி செல்கின்றனர். ரவுடிகளும் ஹாஸ்பிடல் நோக்கி வருகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்