போட்டோகிராபரை சுற்றி வளைத்த அருண், ஆனந்த்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த சாமியார் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
Karthigai Deepam : ரம்யாவும் நானும் விசாரிச்சேன், அவரே நம்ம பேர் என்னனு கூட சொல்வாருன்னு கேள்வி பட்டேன் என்று அளந்து விடுகிறாள். பிறகு உள்ளே சென்று சாமியாரை சந்திக்க அவர் உங்க பேர் ரம்யா.. உங்க பேர் தீபா என்று பெயரை மாற்றி சொல்ல ரம்யா ஷாக் ஆகிறாள்.

Karthigai Deepam: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்று போட்டோகிராபரை சுற்றி வளைத்த அருண், ஆனந்த்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த சாமியார் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில்இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரம்யாவுடன் சாமியாரை பார்க்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சுரேஷ் ரியா அபிராமியை சுட்டு தள்ளிய வீடியோ
அதாவது, ரியா ஐஸ்வர்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட அவள் உன்னை மாட்டி விட நான் போலீசை கூட்டிட்டு வரல என்று சமாளிக்கிறாள். இதையடுத்து போட்டோகிராபர் சுரேஷ் வீடு காட்டப்படுகிறது. சுரேஷ் ரியா அபிராமியை சுட்டு தள்ளிய வீடியோவை பார்த்து பயந்து கொண்டிருக்க ரியா போன் செய்து மரியாதையா அந்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு, உனக்கு தேவையான பணத்தை நான் தரேன் என்று மிரட்டுகிறாள்.