தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthigai Deepam Serial Today Episode Update Here

Karthigai Deepam: கார்த்திக்கு தெரிய வந்த ரெசார்ட் உண்மை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 23, 2024 03:12 PM IST

கார்த்திக்கு தெரிய வந்த ரெசார்ட் உண்மை.. தீபாவால் தர்மலிங்கத்தை தேடி வந்த பதவி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா என்னுடைய இந்த திறமை வெளிவர காரணம் கார்த்திக் தான் என்று நன்றி சொல்லி குடும்பத்தார் எல்லோரையும் அறிமுகப்படுத்தி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திக் மியூசிக் டைரக்டர் ஒருவரை சென்று சந்திக்க அவர் பொதுவா பெண்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்ப மாட்டாங்க. நீங்க தீபாவ வெளிய அனுப்புவீங்களா என்று கேட்க, எங்க குடும்பத்துல அப்படி இருக்க மாட்டோம். கண்டிப்பா அவங்க திறமைக்கு மதிப்பு கொடுப்போம் என்று கூறுகிறார்.

அதன் பிறகு கார்த்திக், அங்கிருந்து வெளியே வர அவரது குடும்பத்தின் லீகல் அட்வைசர் போன் செய்து என்ன சார் நீங்கள் அட்வைஸ்வர மாற்றிவிட்டீர்களா? எப்பொழுதும் எதுவாக இருந்தாலும் என்கிட்ட தானே கேட்பீங்க என்று கேட்கிறார். அதற்கு கார்த்திக் அப்படியெல்லாம் இல்லையே என்னாச்சு என்று கேட்கிறார்.

அருண் ஏதோ ஒரு புதுசா ஒரு பிராப்பர்ட்டி வாங்கி இருக்கிறார். ரிஜிஸ்டர் ஆஃபீஸ் போயிருக்கும் போது தெரியவந்தது என்கிறார்.  கார்த்திக் உண்மை எதுன்னு சொல்லாமல், அந்த ரெசார்ட் தானே என்று கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்ல, கார்த்திக் ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து போனை வைக்கிறார்.

பிறகு நேராக ரிசார்ட்டில் அருணை சென்று சந்திக்கும் கார்த்திக், என்ன அருண் ரிசார்ட் வாங்கிட்டியா பணம் எப்படி வந்தது என்று கேட்கிறான். அதற்கு அவன் ஆமா வாங்கிட்டேன் ஆனா பணம் எப்படி வந்தது என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்று சொல்கிறான்.

சரி ஏன் வாங்கினதை அம்மா கிட்ட சொல்லல என்று கேட்க, அவங்களுக்கு நீ தான் முக்கியம். உன்ன பத்தி மட்டும் தான் யோசிக்கிறாங்க, அதனாலதான் நானே பணம் போட்டு வாங்கிட்டேன். 

சரியான நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன் நீ எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல, கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான். ‌‌

தீபாவின் இன்டர்வியூ டிவியில் பார்த்த ரூபஸ்ரீ தீபா ஜெயித்து கிட்டே போறா… இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஆவேசப்படுகிறாள். 

அதேபோல் தீபாவின் இண்டர்வியூவை பார்த்த ஊர் மக்கள் நேராக தர்மலிங்கம் வீட்டுக்கு சென்று வாழ்த்து அவரை தர்மகத்தாவாக நியமிக்க முடிவு எடுத்து இருப்பதாக சொல்கின்றனர். 

எப்போதும் ராஜஸ்ரீ தானே தர்மகத்தாவாக இருப்பாங்க என்று தர்மலிங்கம் கேட்க, இந்த முறை அந்த பதவியை உங்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள். இதைக்கேட்ட தர்மலிங்கம் அவர்களுக்கு பிரச்சினை இல்லை என்றால், எனக்கும் பிரச்சினை இல்லை என்று சொல்கிறார்.

ஊர் மக்களின் இந்த முடிவால் தர்மலிங்கம் குடும்பம் மகிழ்ச்சி அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

IPL_Entry_Point

டாபிக்ஸ்