கோவில் நகையை மீட்டெடுக்கும் கார்த்திக்.. அம்மாவை காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கோவில் நகையை மீட்டெடுக்கும் கார்த்திக்.. அம்மாவை காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம்

கோவில் நகையை மீட்டெடுக்கும் கார்த்திக்.. அம்மாவை காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம்

Aarthi Balaji HT Tamil
Published Jun 26, 2025 05:50 PM IST

பரமேஸ்வரி பாட்டி எப்படியாவது கோவில் நகையை கண்டு பிடிக்கணும் இல்ல நான் உங்க தாத்தாவோட கௌரவம் போயிடும் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இந்த சமயத்தில் கார்த்திக் கீழே புலிப்பல் ஒன்று இருப்பதை கவனிக்கிறான்.

கோவில் நகையை மீட்டெடுக்கும் கார்த்திக்.. அம்மாவை காப்பாற்ற போவது எப்படி?
கோவில் நகையை மீட்டெடுக்கும் கார்த்திக்.. அம்மாவை காப்பாற்ற போவது எப்படி?

அதாவது, பரமேஸ்வரி பாட்டி எப்படியாவது கோவில் நகையை கண்டு பிடிக்கணும் இல்ல நான் உங்க தாத்தாவோட கௌரவம் போயிடும் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இந்த சமயத்தில் கார்த்திக் கீழே புலிப்பல் ஒன்று இருப்பதை கவனிக்கிறான்.

இதை சமையல்காரன் ஒருவன் போட்டுக் கொண்டிருப்பதை நினைவு கூறும் கார்த்தி அதை வைத்து தேடுதலை தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் அந்த சமையல்காரனை பிடித்து அடித்து விசாரிக்கையில் இதெல்லாம் விருமன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துவேலின் திட்டம் என்பது தெரிய வருகிறது.

இதையடுத்து கார்த்திக் விருமன் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த இங்கு நகைகள் எதுவும் இல்லை என தெரிய வருகிறது. கடைசியாக வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு இடத்தில் நகைகள் புதைக்கப்பட்டிருப்பது அறிந்து கார்த்திக் அதை மீட்டெடுக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.