Karthigai Deepam Serial: பந்தகால் நடும் விழாவில் அபசகுணம்.. ரம்யாவால் அதிர்ச்சியான அப்பா - கார்த்திகை தீபம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam Serial: பந்தகால் நடும் விழாவில் அபசகுணம்.. ரம்யாவால் அதிர்ச்சியான அப்பா - கார்த்திகை தீபம்

Karthigai Deepam Serial: பந்தகால் நடும் விழாவில் அபசகுணம்.. ரம்யாவால் அதிர்ச்சியான அப்பா - கார்த்திகை தீபம்

Aarthi Balaji HT Tamil
Aug 01, 2024 11:47 AM IST

Karthigai Deepam Serial: ரம்யா சேகரை மடக்கி பிடித்து எதுக்கு இங்க வந்த? இங்கிருந்து ஓடி போயிடு, மாட்டிக்கிட்டா உனக்கும் பிரச்சனை, எனக்கும் பிரச்சனை என்று எச்சரிக்கிறாள்.

பந்தகால் நடும் விழாவில் அபசகுணம்.. ரம்யாவால் அதிர்ச்சியான அப்பா - கார்த்திகை தீபம்
பந்தகால் நடும் விழாவில் அபசகுணம்.. ரம்யாவால் அதிர்ச்சியான அப்பா - கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சேகர் அபிராமியிடம் வேலை கேட்டு கார்த்திக் வீட்டுக்கு வந்த நிலையில் இன்று ( ஆகஸ்ட் 1 )  நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

எதுக்கு இங்க வந்த?

அதாவது ரம்யா சேகரை மடக்கி பிடித்து எதுக்கு இங்க வந்த? இங்கிருந்து ஓடி போயிடு, மாட்டிக்கிட்டா உனக்கும் பிரச்சனை, எனக்கும் பிரச்சனை என்று எச்சரிக்கிறாள்.

இந்த நேரத்தில் கார்த்திக் மாடியிலிருந்து கீழே இறங்கி வர சேகர் மறைந்து கொள்கிறான். அதன் பிறகு பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க தொடங்குகிறது.

கல்யாணத்துக்கு எதிராக செயல்படுவது யார்

அடுத்ததாக அய்யர் மந்திரத்தை சொல்லி பந்தக்கால் நடுவதற்காக குழி எடுக்க சொன்னதும் சொந்தக்காரர்கள் குழி எடுக்க அதில் பூரான் ஒன்று இருப்பதை பார்த்து அபசகுணம் என்று அதிர்ச்சி அடைகின்றனர். யாரோ ஒருவர் இந்த கல்யாணத்துக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார். மேலும் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கு அதை செய்துவிடலாம் என்று ஐயர் சொல்கிறார்.

ரம்யாவின் டைரி

அதன் பிறகு பந்தக்கால் நட்டு முடிய கார்த்திக், தீபா என இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். மறுபக்கம் ரம்யா வீட்டில் அவளது அப்பா எதையோ ஒன்றைத் தேட அப்போது ரம்யாவின் டைரி கையில் கிடைக்க அதைப் பிரித்து படிக்கும் போது அவள் கார்த்தியின் மீது காதலுடன் இருப்பதும் தீபாவை கொல்ல துடிப்பதும் தெரிய வருகிறது.

இதனால் அதிர்ச்சியாகும் அவளது அப்பா கார்த்திக்கு போன் போட்டு உடனடியாக உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை போட்டு தர சொல்லி கேட்க, அபிராமி அவனை வீட்டிற்கு அழைத்து கொண்டு கிளம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக் வீட்டிற்கு வந்திருந்த போலீஸ், அதிகாரிகளிடம் சாமியார் கெட்டப்பே போலியா இருந்தா என்ன செய்வது என்று சொல்ல, அவனை தாடி மீசை இல்லாமல் வரைந்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

பிறகு அவனை வரைந்தும் முடிக்கும் நேரத்தில், அபிராமி சேகருடன் வீட்டிற்கு வர, ரம்யா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இவனை வேலைக்கு எடுத்திருப்பதாக அறிமுகம் செய்து உள்ளே செல்ல ரம்யா நீ யார் வீட்டிற்கு வந்திருக்க தெரியுமா? இது கார்த்தியோட வீடு. உன்னை கூட்டிட்டு வந்தவங்க கார்த்தியோட அம்மா என்று சொல்லி திட்டுகிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.