தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthigai Deepam Serial Today Episode Latest Update

Karthigai Deepam: அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. உச்ச கட்ட பதற்றத்தில் கார்த்திகை தீபம் சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 29, 2024 02:05 PM IST

அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்தியின் மீது வரும் சந்தேகம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் டெட் பாடியை அடையாளம் காண போக, அது அபிராமி இல்லை என்று தெரிய வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது அபிராமியுடன் இன்றைய எபிசோட் தொடங்குகிறது. அபிராமி தூரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்து அங்கு படுத்திருக்கிறாள்; ஐயர் கோயிலை மூட போகும் சமயத்தில் அபிராமியை பார்த்து யாரு நீங்க? கோயிலை மூடனும் என்று சொல்கிறார். அபிராமி வீட்டில் ஒரு பிரச்சினை அதனால் இன்னைக்கு மட்டும் இங்க தங்கிக்கிறேன் என்று அனுமதி கேட்க, அய்யரும் சம்மதம் சொல்கிறார்.

மறுபக்கம் ஐஸ்வர்யா ரியாவை சந்தித்து நீ எங்க கூட கூட்டு சேர்ந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்குத் தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா, ஒரு கோயிலுக்கு போவாங்க, இப்பவும் அங்கே இருக்க தான் வாய்ப்பு இருக்கு, அங்கேயே வச்சு அவங்கள தீர்த்து கட்டிடலாம் என்கிறாள். அதன் பின்னர் மீனாட்சியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு, இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வரலாம் என்று சொல்ல, ரியா பயந்து நடுங்குகிறாள்.

ஆனாலும், ஐஸ்வர்யா அவளது மண்டையை கழுவி கூட்டு சேர்கிறாள். மறுபக்கம் ஆனந்த், நீ தான் அம்மாவை எங்கயோ மறைச்சு வச்சிருக்க, எனக்கு நல்லாவே தெரியும் என கார்த்தியிடம் சண்டையிடுகிறான். 

அபிராமி கோயிலில் திருப்பணி செய்து மன நிம்மதியை தேடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக் பயங்கர பதற்றத்துடன் டெட் பாடியை பார்க்க, அது அபிராமி இல்லை என்று தெரிந்து, நிம்மதி அடைகிறான்; உடனே வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல, எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். ஆனால் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் கடுப்பாகின்றனர்.

இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அபிராமியை தேடி அலையும் போது, வழியில் ஒரு பெண்மணியை பார்க்க சந்திக்க நேர்கிறது. அவர் அபிராமியை போலவே நடந்து செல்ல, கார்த்திக் அது அம்மா என நினைத்து ஓடி போய் பேச முயற்சிக்கிறான். ஆனால், அது அபிராமி இல்லை, வேறு யாரோ என்பது தெரிய வருகிறது.

பிறகு மீண்டும் அபிராமியை தேடி கார்த்திக் செல்லும் போது வழியில், காரின் குறுக்கே கார்த்தி பாட வைத்த துப்புரவு பணியாளர் ராணி வருகிறாள். கார்த்திக் அவளை காப்பாற்றுகிறான்.

அடுத்து கோயிலுக்கு வரும் கார்த்திக் கடவுளிடம், அபிராமி கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறான். மேலும் அம்மாவுடனான சிறு வயது நினைவுகளை நினைத்து பார்த்து கண் கலங்குகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்