Karthigai Deepam: பெங்களூர் போக பிளான் போட்ட ரம்யா.. தீபாவால் கார்த்திக் கொடுத்த ஷாக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: பெங்களூர் போக பிளான் போட்ட ரம்யா.. தீபாவால் கார்த்திக் கொடுத்த ஷாக்

Karthigai Deepam: பெங்களூர் போக பிளான் போட்ட ரம்யா.. தீபாவால் கார்த்திக் கொடுத்த ஷாக்

Aarthi Balaji HT Tamil
Jun 06, 2024 01:02 PM IST

Karthigai Deepam: ரம்யா அவர்கள் விட்டுச் சென்ற புடவை எடுத்து கட்டி பார்த்துக் கொண்டிருக்க மீனாட்சி காலிங் பெல் அடித்ததும் அதை கவனித்த ரம்யா புடவையை எடுத்து வைத்து மீனாட்சியிடம் கொடுத்து அனுப்புகிறாள்.

பெங்களூர் போக பிளான் போட்ட ரம்யா.. தீபாவால் கார்த்திக் கொடுத்த ஷாக்
பெங்களூர் போக பிளான் போட்ட ரம்யா.. தீபாவால் கார்த்திக் கொடுத்த ஷாக்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி மறந்துவைத்து விட்டு வந்த புடவை எடுப்பதற்காக ரம்யா வீட்டிற்கு திரும்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காலிங் பெல் அடித்த மீனாட்சி

அதாவது ரம்யா அவர்கள் விட்டுச் சென்ற புடவை எடுத்து கட்டி பார்த்துக் கொண்டிருக்க மீனாட்சி காலிங் பெல் அடித்ததும் அதை கவனித்த ரம்யா புடவையை எடுத்து வைத்து மீனாட்சியிடம் கொடுத்து அனுப்புகிறாள். கூடவே மீனாட்சி ரம்யா கார்த்திகா வைத்திருந்த சீதா ராமன் சிலையையும் கொண்டு செல்கிறார்.

இதை அடுத்து வீட்டுக்கு வந்த மீனாட்சி அந்த சிலையை தீபாவிடம் கொடுப்பதற்காக ரம்யாவிடம் சொல்லாமலே கொண்டு வந்ததாக சொல்கிறார். ரம்யா சார்பாக நானே கொடுத்து விட கொண்டு வந்ததாக சொல்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் கார்த்திக் ரம்யாவுடன் பெங்களூரு செல்வதாக சொல்ல தீபா பொசசிவ்வில் கோபப்படுகிறாள்.

பெங்களூருக்கு கிளம்ப தயாரான ரம்யா

இதைப் புரிந்து கொண்ட கார்த்திகை இங்கிருந்து நகர்ந்து வருகிறான். மறுபக்கம் ரம்யா பெங்களூருக்கு கிளம்ப தயாராக இருக்க டிரைவரையும் வேண்டாம் என்று சொல்கிறாள். கார்த்தியே காரை ஓட்டுவான் எனவும் கணக்கு போட அங்கு வந்த கார்த்தி என்ன தப்பா நினைச்சுக்காதீங்க.. என்னால உங்க கூட பெங்களூரு வர முடியாது என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்ல இப்ப நான் உங்க கூட இருக்கணும் என்று சொல்ல ரம்யா வேறு வழி என்று ஓகே சொல்கிறாள்.

அடுத்ததாக நடக்கப் போவது என்ன

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

பணத்தை கொடுத்தாங்க என்று சொல்ல, கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து மோதிரத்தை கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டான்.

ரம்யா உங்க மேல எனக்கு கோபம் இல்ல, அந்த மோதிரம் உங்க கிட்ட இருக்கனும்னு நினைச்சேன். அவ்வளவுதான் என்று சொல்கிறாள். நாளைக்கு மோதிரத்தை உங்கக்கிட்ட திரும்பி கொடுக்கிறேன் என்று சொல்லி போனையும் வைக்கிறாள்.

அடுத்து அபிராமிக்கும், மீனாட்சிக்கும் புடவையை மறந்துட்டு வந்த விஷயம் நினைவுக்கு வர, மீனாட்சி மட்டும் தனியாக ரம்யா வீட்டிற்கு திரும்பி வருகிறாள். இங்கே வீட்டில் ரம்யா கார்த்தியை நினைத்து கொண்டு, அந்த புடவையை கட்டி பார்த்து கொண்டிருக்கிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.