Karthigai Deepam Serial: தீபாவை குத்த வந்தது யார்? இன்வெஸ்டிகேஷனில் இறங்கிய கார்த்திக்!
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தன்னை ஒருவன் கத்தியால் குத்த விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பற்றி தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தன்னை ஒருவன் கத்தியால் குத்த விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அண்ணி இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க
அதாவது, கார்த்திக் தீபா சொன்னதை கேட்டு இதெல்லாம் ஐஸ்வர்யா வேலையாக தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறான், உடனே ஆபிஸ்க்கு கிளம்பி வந்து ஆனந்திடம் ஐஸ்வர்யா அண்ணி இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்ல அவனும் ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு நீங்க ஏதாவது பண்ணீங்களா என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள்.
அடுத்து தீபா கை உடைந்து சாப்பிட முடியாமல் ரூமுக்குள் இருக்க அங்கு வந்த அபிராமி தீபாவை நலம் விசாரித்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட இருக்கும் இடையேயான மாமியார் மருமகள் பிணைப்பு அதிகமாகிறது.
கார்த்திக் லவ் ஸ்டோரி
அடுத்து ரம்யா ஆபிஸ் காட்டப்படுகிறது. இந்த ஆபிஸ் சுவரில் யாரோ கார்த்திக் லவ் ஸ்டோரி என்று எழுதி இருக்க இதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர், ஆபிஸ் வந்த ரம்யா இதை பார்த்து பயங்கர கோபமாகி யார் எழுதியது என்று எல்லாரையும் அதட்டி கேள்வி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.\
நேற்றைய எபிசோட்
அடுத்து கார்த்திக், தீபாவை டாக்டரிடம் அழைத்து செல்ல அவர் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல, நாளைக்கு திரும்பவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க, இப்போ நீங்க வீட்டிற்கு போகலாம் என்று அனுப்பி வைக்கின்றனர். அடுத்ததாக அருண் ஆனந்த ஆகியோர் ரம்யாவை ஆபிஸில் வைத்து சந்திக்கின்றனர்.
நான் அனுப்புன எம்பிளாயி எப்படி வேலை செய்யுறான்? என்று ஆனந்த் கேட்க ரொம்ப நடிக்காத அவன் உன் தம்பி தான் என்று எனக்கு தெரியும் என்று ஷாக் கொடுக்கிறாள் ரம்யா. பிறகு அவனை எதுக்கு என்கிட்டே வேலைக்கு அனுப்பின என்று கேட்க அவன் இண்டஸ்ட்ரி பத்தி தெரிஞ்சிக்கணும் அதுக்கு உன் கம்பெனி தான் சரியா இருக்கும்னு அனுப்பியதாக சொல்கிறான். பிறகு நீ கார்த்தியை லவ் பண்றியா என்று கேட்க ரம்யா இல்லை அவன் எனக்கு தொழிலாளி தான் என்று பொய் சொல்கிறாள்.
வீட்டிற்கு வந்த தீபா கார்த்திக்கிடம் எனக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல, ஒரு ரவுடி தன்னை கொல்ல வந்ததாக உண்மையை உடைக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்