தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவின் புருஷன் கார்த்தி என்று அறியும் ரம்யா.. அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன?

Karthigai Deepam: தீபாவின் புருஷன் கார்த்தி என்று அறியும் ரம்யா.. அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன?

Aarthi Balaji HT Tamil
May 25, 2024 01:42 PM IST

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா காரில் வந்து கொண்டிருக்க ஐஸ்வர்யா வழி மறித்து வம்பிழுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தீபாவின் புருஷன் கார்த்தி என்று அறியும் ரம்யா.. அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன?
தீபாவின் புருஷன் கார்த்தி என்று அறியும் ரம்யா.. அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா காரில் வந்து கொண்டிருக்க ஐஸ்வர்யா வழி மறித்து வம்பிழுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்

அதாவது, ரம்யா ஐஸ்வர்யாவின் சதியை மீறி ஆட்டோவில் கிளம்பி வர அவளது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று ஹாஸ்பிடலில் இருந்து போன் வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இதே போல் போன் காலில் ஏமாற்றியதால் ரம்யா அதை நம்ப மறுக்க டாக்டரே போனை வாங்கி உண்மையை சொல்ல பதறியடித்து ஓடுகிறாள். தீபாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட இங்கே கல்யாண நாள் கொண்டாட்டம் நடந்து முடிகிறது.

அதன் பிறகு தீபாவும் கார்த்தியும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர், ரம்யாவின் அப்பாவை பார்த்து விட்டு கிளம்பி வருகின்றனர். இந்த நேரம் அங்கு ரம்யா இல்லாமல் இருக்க இவள் மேலே வந்ததும் தீபாவும் அவளுடைய கணவரும் வந்துட்டு போனாங்க என்று சொல்ல ரம்யா வெளியே ஓடி வர இவர்கள் லிப்ட்டுக்குள் சென்று விடுகின்றனர். 

இதனால் ரம்யா படிக்கட்டில் இறங்கி வர லிப்டில் இருந்து வெளியே வந்த தீபா தவறி விழ போக கார்த்திக் அவளை தாங்கி பிடிக்க அதை பார்த்து விடும் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்பது தெரிய வருகிறது.

தூக்கமின்றி தவிப்பு

இதனையடுத்து ரம்யா அப்பாவிடம் கார்த்திக் குறித்து சொல்ல அவங்க தான் உன்னை முதலில் பொண்ணு பார்க்க வந்தாங்க, அப்போ நீ தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்ட என்று சொல்கிறார். இதனால் இரவெல்லாம் தூக்கமின்றி தவிக்கிறாள், மறுபக்கம் ரியா ஒருவனை கூப்பிட்டு மீனாட்சி அவுட் ஹவுசில் தங்கி இருக்கா, நீ அங்க போ நான் திருடன் திருடனு கத்துவேன். அப்போ நீ மீனாட்சி கூப்பிட்டு தான் வந்ததாக சொல்லி எஸ்கேப் ஆகிடு என்று சொல்கிறாள்.

இதனையடுத்து அதே போல் ரியா நைட் நேரத்தில் திருடன் திருடன் என கத்த இவள் ஏற்பாடு செய்தவன் வராத நிலையில் ஆனந்த், அருண் என எல்லாரும் கூடி விடுகின்றனர். 

அதன் பிறகு அவன் ரியா ரூமில் இருந்து வெளியே வந்து ரியா சொல்லி தான் வந்ததாக சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள், அதன் பிறகு இவன் மீனாட்சி அக்கா ரூமுக்குள்ள போனதை நான் பார்த்தேன், உண்மையை சொல்லு போலீசில் பிடித்து கொடுத்துவேன்னு சொன்னதும் ரியா தான் இப்படி பண்ண சொன்னதாக உண்மையை உடைக்கிறாள். இதனால் ஆனந்த் ரியாவை பிடித்து அறைந்து விடுகிறான்.

அடுத்த நாள் காலை

எல்லாரும் உனக்கு எதுவோ இந்த வேலை என்று ரியாவை மோசமாக திட்டுகின்றனர், அடுத்த நாள் காலையில் ஆபீஸ் வரும் ரம்யா எப்படியாவது கார்த்தியை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள், பி.ஏ-வை கூப்பிட்டு அன்னைக்கு ஒரு லெட்டர் குடுத்தனே அதை கார்த்தியிடம் கொடுத்தயா என்று கேட்க அவன் ஆமாம் கொடுத்தேன் என்று சொல்கிறான், கார்த்தியும் பதிலுக்கு ஒரு லெட்டரை கொடுத்தார். அதை தான் உங்களிடம் கொடுத்ததாக சொல்ல ரம்யா அவனை அறைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்