தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரம்யாவால் கார்த்தியுடன் வந்த சண்டை.. தீபா கொடுத்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Karthigai Deepam: ரம்யாவால் கார்த்தியுடன் வந்த சண்டை.. தீபா கொடுத்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Aarthi Balaji HT Tamil
May 16, 2024 02:00 PM IST

Karthigai Deepam: கார்த்திக் ரம்யாவை கூட்டி கொண்டு பைக்கில் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தீபா கொடுத்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தீபா கொடுத்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

கார்த்திக் ரம்யாவை கூட்டி கொண்டு பைக்கில் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதிர்ச்சியும் கோபமும் அடைந்த தீபா

ரம்யா மற்றும் கார்த்திக் ஜோடியாக பைக்கில் செல்வதை பார்த்த ஒரு பெண்மணி தீபாவுக்கு தகவல் கொடுக்க தீபா அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள்.

அடுத்ததாக கார்த்திக், ரம்யா ஆகியோர் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு வர ஆனந்த் டெண்டர் நமக்கு தான் கிடைக்கும் என்று ஆவலோடு இருக்க அது ரம்யா கைக்கு செல்கிறது. இதனால் ஆன குழப்பம் அடைய ஃபிளாஷ் கட்டில் பி ஏ ஆனந்திடம் பேசிய விஷயத்தை கேட்டு ரம்யாவிடம் சென்று அமௌன்ட்டை மாற்றிய தெரிய வருகிறது.

நேர்மையா வேலை செய்

அடுத்ததாக ஆனந்த் என்ன கார்த்தி புது கம்பெனிக்கு விசுவாசமா வேலை செய்து போல என்று கேள்வி கேட்க ஆமா நான் வேலை செய்கிற கம்பெனிக்கு விசுவாசமா இருக்கேன். நேர்மையா வேலை செய். இப்படி குறுக்கு வழியில முன்னேறினா அது நிலைக்காது என்று அறிவுரை சொல்கிறான். இப்படி குறுக்கு வழியில் முன்னேறினா அது நிலைக்காது என்று அறிவுரை சொல்கிறான்.

அதன் பிறகு கார்த்திக் வீட்டுக்கு வர தீபா நீங்க ஒரு பொண்ணு கூட பைக்ல போனீங்களா என்று கேட்க அவனின் ஆமாம் என்று சொல்ல தீபா கோபப்படுகிறாள். கார்த்திக் என்னோட பாஸ் தான் கூட்டிட்டு போனேன் கார் ரிப்பேர் ஆயிடுச்சு. முக்கியமா போக வேண்டிய டெண்டர் மீட்டிங். அதனால் பைக்கில் கூட்டிட்டு போனேன் என்று சொல்கிறான்.

அடுத்ததாக நடக்க போவது என்ன

இதைக் கேட்ட தீபா இதெல்லாம் சரி தான் ஆனால் இனி யாரையும் நீங்க பைக்ல கூட்டிட்டு போக கூடாது. உங்க கூட பைக்ல உட்காரும் உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு என்று கண்டிஷன் போட கார்த்திக்கு அதற்கு சம்மதம் தெரிவித்து பிரச்னையை தீர்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்