Karthigai Deepam Serial: ரொமான்ஸ் மோடில் கார்த்திக்.. விவாகரத்து கேட்ட மீனாட்சி, ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி
Karthigai Deepam Serial: அபிராமி வீட்டில் தீபாவை கலாய்த்து கொண்டே முதலிரவு ரூமை ஏற்பாடு செய்து முடித்து வைக்கின்றனர். அதன் பிறகு தீபாவை ரெடி பண்ணி ரூமிலேயே இருக்க சொல்கின்றனர். மறுபக்கம் கார்த்திக் ரம்யா கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க அவனை ஓவர் டியூட்டி பார்க்க சொல்கின்றனர்.
Karthigai Deepam Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என பார்க்கலாம்.
கார்த்திக்கும், தீபாவுக்கும் இடையே சாந்தி முகூர்த்தம் நடத்துவதற்கு ஜோதிடரிடம் விவாதிப்பதும், அலுவலகத்தில் மெஷின் இன்ஸ்டால் விஷயத்தில் கார்த்திக்கை கடிந்து கொள்ளும் ரம்யா என கார்த்திகை தீபம் நேற்றைய ( மே 7 ) எபிசோடில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சியும் மைதிலியும் சேர்ந்து முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அலுவலகத்தில் கார்த்திக்கிற்கு வந்த ஓவர் டியூட்டி
அதாவது, அபிராமி வீட்டில் தீபாவை கலாய்த்து கொண்டே முதலிரவு ரூமை ஏற்பாடு செய்து முடித்து வைக்கின்றனர். அதன் பிறகு தீபாவை ரெடி பண்ணி ரூமிலேயே இருக்க சொல்கின்றனர். மறுபக்கம் கார்த்திக், ரம்யா கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க அவனை ஓவர் டியூட்டி பார்க்க சொல்கின்றனர்.
கார்த்திக்கும் அதே போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வர அவனிடம் புது துணி எல்லாம் இருக்கு, போய் ரெடியாகிட்டு வாங்க என்று மீனாட்சி சொல்ல எதுக்கு அண்ணி என்று கேட்க மேலே தீபா வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவ சொல்லுவா என்று கலாய்க்கின்றனர்.
வீட்டிற்கு வந்து குண்டு வீசிய லாயர்
இதையடுத்து கார்த்திக் மேலே வர ரூம் அலங்காரங்களை பார்த்து விட்டு இதுக்கு தான் என்னை ஓடிட்டு இருந்தார்களா? என்று தீபாவிடம் ரொமான்ஸாக பேசி விட்டு சரி ப்ரெஷ் ஆகிட்டு வரேன் என்று குளிக்க செல்கிறான். மறுநாள் லாயர் ஒருவர் வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்டு அப்ளை பண்ணி இருந்தது யாரு என்று கேட்கிறார், எல்லாரும் புரியாமல் இருக்க மீனாட்சி நான் தான் என்று ஷாக் கொடுக்கிறாள்.
ஆனந்திடம் நீங்க தான் வேற கல்யாணம் பணிக்கிடீங்கல எனக்கு விவாகரத்து கொடுத்து அறுத்து விட்டுடுங்க, நான் என் வாழ்க்கையை பார்த்துக்கறேன், வேற கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்ல ஆனந்த் கையெழுத்து போட முடியாது என்று மறுக்கிறான்.
கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன?
இது இருந்தால் தானே ஆடுவ என்று டாகுமெண்ட்ஸை கிழித்து போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்