Tamil News  /  Entertainment  /  Karthigai Deepam Serial Today Episode

Karthigai Deepam: கார்த்தியை பழி தீர்க்க வந்த பாப்பா.. தீபாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Aarthi Balaji HT Tamil
Jan 30, 2024 01:07 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதாவது, பர்த் டே பார்ட்டியில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை உடைத்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கிறான் கார்த்திக், பிறகு தீபா கார்திக்கியிடம் மன்னிப்பு கேட்க அவன் உங்கள பெரிய பாடகியாக்கி காட்டுறேன் என்று சொல்கிறான்.

அதன் பிறகு ஐஸ்வர்யாவை சந்திக்கும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, சிதம்பரத்தின் மனைவி என அறிமுகம் செய்து கொள்கிறாள். அந்த கார்த்தியை சும்மா விட கூடாது, எனக்கு உங்களுடைய உதவி தேவை என்று சொல்ல ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் இந்த கூட்டணிக்குள் சேர்த்து கொள்கிறாள்.

இதெல்லாம் முடிந்த பிறகு கார்த்திக் ஆபிசில் இருக்க அங்கு வரும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, உங்க வாழ்க்கையை சின்னாபின்னமாக ஆக்காமல் விட மாட்டேன் என்று சவால் விடுகிறாள். 

இப்படியான நிலையில் எடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel
பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.