Karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம்.. அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா - கார்த்திகை தீபம்!
karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம், அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்க்கலாம்.

karthigai Deepam : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக் காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் நிச்சயதார்த்த போட்டோ வாங்க சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, போட்டோவை வாங்க செல்வதற்கு முன்பாக இன்விடேஷனை தேர்வு செய்ய செல்கின்றனர், ரேவதிக்கு எந்த டிசைன் தேர்வு செய்வது என்ற குழப்பம் உருவாக கார்த்தியை தேர்வு செய்ய சொல்கிறாள். கார்த்தி ஒரு டிசைனை தேர்வு செய்து கொடுக்கிறான்.
கார்த்திக் ஷாக்
அடுத்ததாக நிச்சயதார்த்த போட்டோவை வாங்க செல்கின்றனர், அப்போது அந்த போட்டோவில் மாயா பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து கார்த்திக் ஷாக் ஆகிறான், டாக்டரின் மகள் சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்கிறான்.
