ஊசலாடிய கோயில் கலசம்..பரபரப்பில் சாமுண்டீஸ்வரி.. பொறி வைத்த கார்த்திக்.. என்ன நடந்தது? -கார்த்திகை தீபம் அப்டேட்
ஊசலாடிய கோயில் கலசம்..பரபரப்பில் சாமுண்டீஸ்வரி.. பொறி வைத்த கார்த்திக்.. என்ன நடந்தது? -கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்; இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், சேட்டுவின் குழந்தையை நாகம் சீண்டி விட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் சேட்டுவின் குழந்தையை மருத்துவமனையில் கொண்டு வந்து அட்மிட் செய்ய, சேட்டுவின் மனைவி போன் செய்து கலசத்தைக் கொண்டு வாங்க, அதனால் தான் எல்லா பிரச்சினையும் என்று கூறினாள். இதையடுத்து கலசத்தைக் கொடுத்தவரிடம் சேட்டு அதனை திரும்ப கேட்க, அவர்கள் கொடுக்க முடியாது என கூறி விடுகின்றனர்.
என்ன கலசம்
சேட்டுவின் மனைவி கலசம் குறித்து பேசுவதை கேட்ட கார்த்திக், என்ன கலசம் என்று விசாரிக்க, அந்த பெண்மணி நடந்தது அனைத்தையும் குறித்து கூறினாள். பிறகு சேட்டுவும் அங்கு வந்து விட, கலசத்தை மீண்டும் வாங்குவதற்காக குடோனுக்கு சென்றனர்.
மறுபக்கம், சாமுண்டீஸ்வரி வீட்டில் கார்த்திக்காக காத்திருக்க சந்திரகலா, அந்த ட்ரைவரெல்லாம் திரும்ப வர மாட்டான்.. அவன் தான் இதை திட்டம் போட்டு செய்தது என சொல்ல, மயில்வாகனம் உள்ளிட்டோர் கார்த்திக் வந்து விடுவான் என உறுதியாக பேசுகின்றனர்.
இங்கே குடோனுக்கு வந்து கலசத்தை கேட்க, அந்த வெளிநாட்டு நபர் கொடுக்க முடியாது என சொல்ல, கார்த்திக் போலீசை கூப்பிடுவேன் என மிரட்டி வாங்கி வருகிறான். இங்கே கலசத்தை கொண்டு செல்வதற்காக ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சேட்டு வீட்டிற்குள் புகுந்த நாகம் ஒன்று குழந்தையை சீண்டி விட, சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவித்தாள் இங்கே கார்த்திக் ரவுடிகளை கண்டுபிடித்து, அவர்களை அடித்து விசாரிக்க, கலசத்தை விற்று விட்டதாக கூறினார்கள்.
இதையடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி இந்த பக்கமாக வர, குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர். சேட்டுவின் மனைவி போன் போட்டு அந்த கலசத்தால் தான் எல்லா பிரச்சினையும் என பேச, கார்த்திக் கலசம் என்ற வார்த்தையை கேட்டு விட்டு அந்த பெண்ணை விசாரிக்கிறான்.
சேட்டுவின் மனைவி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல, அந்த கலசத்தை தேடி தான் நாங்க வந்தோம் என கார்த்திக் கூறினான். அந்த பெண்மணி சேட்டுவை சந்தித்து கலசத்தை வாங்கிக்கோங்க என்று கூறினாள்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்