Karthigai Deepam: கார்த்தியின் பெயரை கெடுக்க திட்டம்.. மாயா போட்ட ப்ளான்! - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: அது கார்த்தியாகவே இருக்கட்டும் என்று நலங்கு வைக்க கூப்பிட, அதனை மாயா தடுத்து நிறுத்தினாள். மேலும் யாரோ ஒருத்தர் நலங்கு வைக்கிறதுக்கு மாப்பிள்ளை மகேஷ் நலங்கு வைக்கட்டும் என்று சொல்லி அவனுக்கு போன் போட்டு வரச் சொல்கிறாள். -

Karthigai Deepam: கார்த்தியின் பெயரை கெடுக்க மாயா போடும் பிளான்.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதிக்கு நலங்கு வைக்கும் ஃபங்ஷன் தொடங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திற்கு வாய்த்த வாய்ப்பு
அதாவது, இன்னும் ஒருவர் நலங்கு வைக்க வேண்டும், அது கார்த்தியாகவே இருக்கட்டும் என்று நலங்கு வைக்க கூப்பிட, அதனை மாயா தடுத்து நிறுத்தினாள். மேலும் யாரோ ஒருத்தர் நலங்கு வைக்கிறதுக்கு மாப்பிள்ளை மகேஷ் நலங்கு வைக்கட்டும் என்று சொல்லி அவனுக்கு போன் போட்டு வரச் சொல்கிறாள்.
பஞ்சரான வண்டி
மகேஷ் வரும் வழியில் வண்டி பஞ்சர் என அடுத்தடுத்து தடை உருவாகி, மகேஷ் லேட்டாகிறது. இதனையடுத்து இங்கே கார்த்தியையே நலங்கு வைக்க சொல்கின்றனர், பிறகு நலங்கு வைத்த கார்த்திக், ரேவதிக்கு செயினையும் கொடுக்க, அதை பார்த்து சந்திரகலா எல்லாத்தையும் திட்டம் போட்டு தான் பண்றியா என்று சத்தம் போடுகிறாள். .
சிக்கிக்கொண்ட மாயா
அடுத்து மாயா, பணத்தேவை இருக்கும் ஒரு காதல் ஜோடியை கூப்பிட்டு அவர்களுக்கு பணம் கொடுத்து, கார்த்திக் ரூமுக்கு சென்று, அவன் கெடுத்து விட்டதாக வெளியே ஓடி வர வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு அந்தப் பெண் கார்த்திக் ரூமுக்குள் செல்ல, இதை ராஜ ராஜன் பார்த்து விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி சத்தம் போட்டபடி வெளியில் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்